தேசிய கொடியை தலைகீழாக குத்திய எஸ்பி!
திருவள்ளூர்/தஞ்சாவூர்:
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்குமுன்பே ஆட்சித் தலைவர் அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல தஞ்சை மாவட்ட எஸ்.பி. தேசியக் கொடியை தனது சட்டையில் தலைகீழாக குத்திக் கொண்டு வந்திருந்தார்.
56-வது குடியரசு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஆட்சித் தலைவர்கள்,எஸ்.பிக்கள் உள்ளிட்டோர் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில்மாவட்ட ஆட்சித் தலைவர் குமார் ஜெயந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் போலீஸ் அணிவகுப்புநடந்தது.
நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் தேசியக் கீதம் இசைக்கப்படவிருந்தது. ஆனால் அதை மறந்த ஆட்சித் தலைவர் குமார் ஜெயந்த்வேகம் வேகமாக அங்கிருந்து கிளம்பினார். அதிர்ச்சி அடைந்த எஸ்.பி, ஆர்.டி. ஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஆட்சித் தலைவர்பின்னால் ஓடிச் சென்று தேசிய கீதம் இசைக்கப்படாததை நினைவுபடுத்தினர்.
இதையடுத்து நடந்து கொண்டிருந்த ஆட்சித் தலைவர் அப்படியே நின்றார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முடிந்ததும்ஆட்சித் தலைவர் மீண்டும் தனது வேகத்தைக் கூட்டி நடந்து சென்றார். அப்படி என்ன அவசரமோ?
இதேபோல, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் எஸ்.பி.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
தனது மார்பில் அட்டையாலான தேசியக் கொடியை அவர் குத்தியிருந்தார். மேலே ஆரஞ்சு நிறத்துக்குப் பதில் பச்சை நிறம்இருப்பது போல கொடியை தலைகீழாக அவர் குத்தியிருந்தார்.
இதை யாரும் கவனிக்கவில்லை. தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பும் முடிந்து, முதல்வர் பதக்கம்வழங்கிய பிறகும் கொடி தலைகீழாக இருப்பதை யாரும் கவனிக்கவில்லை.
இந் நிலையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன் என்பவர் கொடி தலைகீழாக இருப்பதைப் பார்த்து விட்டு ராஜேந்திரனிடம் சென்றுதெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வேகமாக கொடியைக் கழற்றி சரியாக மாட்ட முயன்றார். இதைப் பார்த்து விட்டபுகைப்படக்காரர்கள் சட் சட்டென்று போட்டோ எடுத்துக் குவித்து விட்டனர்.
அவர்களை கோபப் பார்வையால் எரித்தார் எஸ்பி.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications