நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்க ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாஉரை நிகழ்த்துகிறார். தமிழக ஆளுனராக 2வது முறையாக பதவியேற்றிருக்கும் பர்னாலா, முதன்முறையாக நாளை சட்டசபையில்உரையாற்றுகிறார்.
நாளை மறுநாள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எஸ். திருநாவுக்கரசு மற்றும் சுதர்ஸனம் ஆகியோரின் மறைவுக்கும், சுனாமியால்இறந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்படும்.
வரும் 2ம் தேதி ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
இந்தக் கூட்டத் தொடரில் சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து பிரச்சினையைக் கிளப்பப் போவதாக திமுககூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் தொடர்பாகவும் பிரச்சினையைக் கிளப்பவும்திட்டமிட்டுள்ளன.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து பாஜக கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா பதவியேற்றது முதல் ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆளுனர் உரைதமிழில் வாசிக்கப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தன. இந் நிலையில் இந்த ஆண்டும் ஆளுநர்உரை தமிழில் வாசிக்கப்படாது என்று சபாநாயகர் காளிமுத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications