சென்னையின் மருமகனாகிறார் முரளீதரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Muralidaranஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சென்னை மலர்மருத்துவமனையின் நிறுவனர் மறைந்த டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதிமலரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 532விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தமிழரான முரளீதரனின் பூர்வீகம் திருச்சி மாவட்டமாகும்.

31 வயதாகும் முரளீதரனுக்கு கடந்த ஒரு வருடமாக அவரது குடும்பத்தினர் பெண் தேடி வந்தனர்.தமிழகத்திலிருந்து பெண் எடுப்பதையே அவர்கள் விரும்பினர். இதற்கான பொறுப்பை பிரபல எழுத்தாளர் லேனாதமிழ்வாணனிடம் அவர்கள் ஒப்படைத்திருந்தனர்.

அவரும் முரளீதரனுக்காக தீவிரமாக பெண் தேடி வந்தார். இந் நிலையில் நடிகர் சந்திரசேகர் மற்றும் சன் டிவியில்பணிபுரியும் சண்முகம் ஆகிய இருவரது முயற்சியால் முரளீதரனுக்கு மதிமலர் நிச்சயம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பிரபலமான மலர் மருத்துவமனையை நிறுவி, கடந்த ஆண்டு மறைந்த டாக்டர் ராமமூர்த்தியின்இளைய மகள் தான் மதிமலர்.

டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் நித்யா ராமமூர்த்தி தம்பதிக்கு இரண்டு பெண்கள். இவர்கள் இரட்டையர்கள்.மூத்தவரான ரதிமலர் ஒரு டாக்டர். இரண்டாவது பெண்ணான மதிமலர், மலர் மருத்துவமனையின் நிர்வாகத்தைக்கவனித்து வருகிறார்.

24 வயதாகும் மதிமலர், எம்பிஏ படித்தவர். முரளீதரனை திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து மதிமலர்கூறுகையில்,

இதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது தோழிகள் இதை நம்பவேமறுக்கிறார்கள். நான் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துப் பார்த்ததில்லை.

முரளீதரன் விளையாடிய போட்டிகளையும் நான் இதுவரை பார்த்ததில்லை. சமீபத்தில் சுனாமி நிவாரண நிதிக்காகஆஸ்திரேலியாவில் விளையாடிய போட்டியில்தான் முரளீதரனின் ஆட்டத்தை டிவியில் பார்த்தேன்.

எனது தந்தைக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நானும் இனிமேல் கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான் என்கிறார்சிரித்தவாரே.

நடிகர் சந்திரசேகர்தான் இருவரது குடும்பத்தினரிடமும் பேசி ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து இருகுடும்பத்தினரையும் இணைய வைத்துள்ளார். சமீபத்தில் முரளீதரன் சென்னை வந்து மதிமலரை சந்தித்துவிட்டுஓ.கே. சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

மதிமலருக்கு கர்நாடக இசை, மேற்கத்திய இசையிலும் நாட்டம் உண்டாம்.

திருமணத்தை நிச்சயம் செய்ய 15 நாட்களில் முரளீதரன் சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ம்தேதி திருமணம் நடைபெறவுள்ளது. சென்னையில்தான் திருமணம்.

முரளீதரனின் பெற்றோர்கள், இலங்கை கண்டி நகரில் மிகப் பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார்கள். அத்தோடு திருச்சியிலும் அவர்களுக்கு ஹோட்டல் உள்ளது.

சென்னையில் உள்ள எம்.ஏ.சி. ஸ்பின் பவுண்டேஷனின் கெளரவ பயிற்சியாளராக முரளீதரன் உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+