சுனாமி: மேலும் 3 மாதங்களுக்கு இலவச பலசரக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமியால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.137 கோடி மதிப்பில் 3 மாதங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வாசித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.5,000 வழங்க கடந்த டிசம்பர் 28ம் தேதிஉத்தரவிட்டேன். அதே மாதம் 31ம் தேதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3,000 வீதம் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வழங்கஉத்தரவிட்டேன்.

இந்த 2 நிவாரண உதவித் திட்டங்களுக்காக ரூ.120 கோடி செலவிடப்பட்டது.

மீனவர்களின் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் தங்களது தொழிலை முழுமையாகத்தொடங்க இன்னும் 3 மாதங்கள் பிடிக்கும்.

அதுவரை அக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் மாதம் ஒன்றுக்கு 30 கிலோ அரிசி மற்றும் ரூ.350 மதிப்பில் 3 லிட்டர்மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில், மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல், புளி, சாம்பார் பொடி, அயோடின் உப்பு, சர்க்கரை,தேயிலைத் தூள் ஆகிய பொருட்களும், 1,000 ரூபாய் ரொக்கமும் 3 மாதங்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

3 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1,526 ரூபாய் வீதம் மொத்தம் 137 கோடி ரூபாய் செலவில் இந்த நிவாரண உதவி வழங்கப்படும்.

கடந்து முறை அரசு வழங்கிய நிவாரணப் பணத்தை ஒரு சில குடும்பத் தலைவர்கள் தங்களது வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்கவில்லைஎன்று புகார்கள் கூறப்பட்டன. அதைத் தவிர்க்கும் வகையில் இந்த முறை நிவாரண உதவிகள் தாய்மார்களிடம் அந்தந்தப் பகுதி நியாயவிலைக்கடைகளின் மூலமாக சுனாமி நிவாரண ஆலோசனைக் குழுக்களின் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படும் என்றார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+