வாக்காளர் பட்டியல் குளறுபடி: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சென்னை - டெல்லி:
கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக கேரள தேர்தல் அதிகாரி தாமஸ் நடத்தியவிசாரணையின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்பதையும் அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள்என்பதற்கான விளக்கத்தையும் அறிக்கையாக சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாவட்ட துணை ஆட்சியர்கள், திண்டுக்கல், பெரியகுளம், பழனி தொகுதிகளில் பணியாற்றியதேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்றிய 2 வருவாய் அதிகாரிகளுக்கும்,ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் அதிகாரிகளாகப்பணியாற்றிய முன்னாள் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் நோட்டீசுக்கும் பதில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டே பெயர்களை நீக்கியது தெரியவந்தால், அவர்களுக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் கமிஷன் நோ-கமெண்ட்ஸ்!
இதற்கிடையே மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிகாரிகளால் முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் 39 தொகுதிகளிலும்மறு தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாகவும் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, துணை தேர்தல் ஆணையர் ஏ.என். ஜாகூறியதாவது:
பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து கருத்து கூற முடியாது. அவரது அறிக்கையின் முழுவிவரத்தை கேட்டிருக்கிறோம். அது கிடைத்ததும் படித்து பார்த்த பின்பே கருத்து கூறப்படும்.
பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும்போது, தொழிலாளர் சேம நிதிக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான காரணங்களை கூறும்படி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
மத்திய அரசு பதிலளித்தபின்பு, தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications