குருமூர்த்திக்கு பிரேம்குமார் அனுப்பிய 62 ரூபா!
சென்னை:
தன்னிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த வீடியோவின் காப்பியைத் தரக் கோரி ரூ. 1,000த்துக்கு காசோலை அனுப்பியசுதேசி ஜாக்ரன் மன்ச் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்திக்கு எஸ்பி பிரேம்குமார் பதிலுக்கு ரூ. 62க்கு டி.டி. அனுப்பியுள்ளார்.
தன்னிடம் எஸ்.பி. பிரேம்குமார் காஞ்சிபுரத்தில் வைத்து நடத்திய விசாரணையின் வீடியோ பதிவை வழங்க வேண்டும் என்று கோரி தனதுவழக்கறிஞர் மூலம் பிரேம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய குருமூர்த்தி, இதற்காக ரூ. 1,000க்கான காசோலையையும் இணைத்துஅனுப்பியிருந்தார்.
இதையடுத்து பொய் சாட்சி கூறியது, வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்கள் தந்தது ஆகியவை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்குருமூர்த்தி மீது வழக்குகள் பதிவு செய்தார் பிரேம்குமார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், குருமூர்த்தி சென்னையை விட்டு அகன்றுவிட்டார். அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால்,நான் தலைமறைவாகவில்லை, மும்பையில் இருக்கிறேன், இதோ என் செல்போன் நம்பர் என்று போலீசாருக்கு பதில் தந்திருக்கிறார்குருமூர்த்தி.
இந் நிலையில் குருமூர்த்தி அனுப்பிய செக்குக்கு பதிலடியாக எஸ்பி. பிரேம்குமார் ஒரு டி.டி. அனுப்பியுள்ளார்.
அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில், பொய் சாட்சி சொன்ன உங்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் நீங்கள்காஞ்சிபுரத்துக்கு விசாரணைக்காக வர வேண்டும்.
நீங்கள் (குருமூர்த்தி) இருக்கும் மயிலாப்பூரில் இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் செலவு 3 ரூபாய். அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து செல்லபஸ் டிக்கெட் செலவு 46 ரூபாய்.
காஞ்சிபுரத்தில் மத்தியான சாப்பாடு செலவு 16 ரூபாய். கோயம்பேட்டில் இருந்து மறுபடியும் மயிலாப்பூர் செல்ல மீண்டும் செலவு 3 ரூபாய்.
ஆக மொத்தம் இந்தக் கடிதத்துடன் 62 ரூபாய்க்கு டி.டி. அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு பிரேம்குமார் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications