ஆட்சியில் பங்கில்லாவிட்டால் தனித்து போட்டி: நாச்சியப்பன்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம்என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் மீண்டும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சோனியா காந்தியிடம் செல்வாக்கு பெற்றுள்ள நாச்சியப்பன், தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்றுபேட்டி கொடுத்து திமுகவை எரிச்சலாக்கினார்ய

இது அவரது சொந்த கருத்தாக கருதப்படவில்லை. காரணம், நாச்சியப்பனின் கருத்துக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பில்மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.

இந் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து அழுத்தம் திருத்தமாக கருத்து தெவித்துள்ளார் நாச்சியப்பன். சிவகங்கையில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பும் பெரிய கட்சி (திமுகஅல்லது அதிமுக) ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கைத் தர வேண்டும்.

வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே ஆட்சியில் பங்குதரும் கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி இடம் பெறும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இல்லை. எனவே இந்த முறை, காங்கிரஸ் ஆதரவுடன்வரும் ஆட்சியில் பங்கு கேட்பதை நாங்கள் தவறாக கருதவில்லை.

ஆட்சியில் பங்கு கொடுக்க மறுத்தால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் நாச்சியப்பன்.

ஏற்கனவே திமுகவுடன் பல விஷயங்களில் காங்கிரசுக்கு கருத்து வேறுபாடு வலுத்தும் வரும் நிலையில், நாச்சியப்பன் மூலம்திமுகவுக்கு செக் வைக்க காங்கிரஸ் தலைமை முயற்சிப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+