பெங்களூர் விப்ரோ அலுவலகத்தில் வெடிகுண்டு புரளிபெங்களூர் விப்ரோ அலுவலகத்தில் வெடிகுண்டு புரளி
பெங்களூர்:
பெங்களூர் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள விப்ரோ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுமோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேர சோதனைக்குப் பின் குண்டு ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
எம்.ஜி.ரோட்டில் புட் வோர்ல்ட்டுக்கு அருகில் உள்ள தெருவில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை அலுவலகம் அமைந்துள்ள காம்ப்ளக்சில் விப்ரோ சாப்ட்வேர்நிறுவன அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு இன்று காலை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள்அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மோட்ட நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். பாம் ஸ்குவாட் போலீசாருடன் இணைந்து அந்த அலுவலகத்தின் 4 தளங்களிலும்சோதனை நடத்தினர். டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.
பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் மீது லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப்பிரிவினருக்கு தகவல் வந்துள்ள நிலையில் இந்த குண்டு மிரட்டல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவைசென்னையில் இருந்து வந்த ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பெங்களூர் போலீசார் கூறியுள்ளனர்.
4ம் தேதி வடமேற்கு டெல்லியில் சூரஜ் விஹார் பகுதியில் பிடிபட்ட இரு லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளுடன் விசாரணை நடத்தியபோதுடேராடூன் இந்திய ராணுவ பயிற்சி மையத்தையும் பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களையும் தாக்க அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதுதெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரின் இந்தச் சதியை நிறைவேற்றத் தயார் நிலையில் இருந்த இன்னொரு தீவிரவாதியும் நேற்று பிடிபட்டான்.
இந் நிலையில் தான் விப்ரோ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications