Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்!!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

இந்தியா-பாகிஸ்தான் இடையே கொல்கத்தாவில் இன்று தொடங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கர் 10,000ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

மொகாலியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிஎத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்தது. இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சிறிதுதென்பட்டது.

ஆனால் இறுதி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் பேட்ஸ்மென்களான அக்ரம் கமாலும், ரசாக்கும் சேர்ந்துஇந்தியாவின் கனவை தகர்த்தனர்.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம்செய்யப்பட்டிருந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சல்மான் பட், நவீதுல் ஹசன் ஆகியோருக்குப் பதிலாகசாகித் அப்ரிதி மற்றும் கலீல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாசில் வெற்றி பெற்ற கங்குலி தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்கஆட்டக்காரர்களான சேவாக்கும், காம்பிரும் களமிறங்கினர்.

காம்பிர் 29 ரன்களில் கனேரியா பந்தில் முதலில் ஆட்டமிழந்தார். அதிரடியாக சேவாக் 81 ரன்களிலும்.டெண்டடுல்கர் 52 ரன்களிலும், கங்குலி 12 ரன்களிலும், வி.வி.எஸ்.லட்சுமண் ரன் ஏதும் எடுக்காமலும், திராவிட்110 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344ரன்கள் எடுத்துள்ளது.

தினேஷ் கார்த்திக் 28 ரன்களுடனும், பதான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

டெண்டுல்கர் 10,000 ரன்கள்:

இன்றைய போட்டியில் டெண்டுல்கர், 37 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடக்கும்5வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு முன்னதாக கவாஸ்கர், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் மற்றும்லாரா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

முஷாரப் ஏப்ரல் 17ம் தேதி டெல்லி வருகை:

ஏப்ரல் 2ம் தேதி கொச்சியில் நடைபெறும் ஒரு நாள் போட்டியைக் காண பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இந்தியாவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாால் அன்றைய போட்டியைக் காண முஷாரப்பால் வரமுடியாது என்றுபாகிஸ்தான் அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டியை முஷாரப் காண வருவார்என்று பாகிஸ்தான் அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே முஷாரப்பின் உறவினர்கள் கு நாளை இந்தியாவுக்கு வருகின்றனர்.

முஷாரப்பின் தாயார் ஸரின், மகன் பிலால் மற்றும் சகோதரர் ஜாவித் ஆகியோர் நாளை இஸ்லாமாபாத்திலிருந்துபுறப்பட்டு டெல்லி வருகின்றனர். இந்த தகவலை பாகிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது.

நாளை மாலை டெல்லி வரும் இவர்கள், முதலில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கின்றனர். இதன் பிறகுநாளை மறுநாள் கொல்கத்தாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காண செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+