கைதிகளிடம் செல்போன்: செயலிழக்க செய்ய ஜாமர் கருவிகள்
கோவை:
கோவை மத்திய சிறையில் செல்போன்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
கோவை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏராளமானோரும் உள்ளனர்.
இந்த சிறையிலுள்ள பல கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் கூறப்படுவது உண்டு. போலீஸாரும் திடீர்சோதனை நடத்தி செல்போன்கள், சார்ஜர்க, சிம் கார்டுகள் உட்பட ஏராளமான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந் நிலையில் சட்டசபையில் சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய பொதுப்பணித் துறைஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கோவை மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் கருவிகள்பொருத்தப்படும் என்று அறிவித்தார்.
அவர் கூறுகையில், உயர் பாதுகாப்பு கொண்ட சிறைவாசிகளை நேர்காணல் செய்யும் போது, தடை செய்யப்பட்ட பொருட்களானகத்தி, போதைப் பொருட்கள், செல்போன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் வகையில் கோவை மத்திய சிறைக்கு 18.07 லட்சம்செலவில் எக்ஸ்ரே ஸ்கேனர் கருவி வழங்கப்படும்.
சிறைவாசிகளை மட்டுமல்லாமல், அவர்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்களையும் சோதனை செய்ய 7.24 லட்சம் ரூபாயில்கதவில் பொருத்தும் 2 பன்முக உலோகத்தை கண்டறியும் டிடெக்டர்கள் கோவை சிறைக்கு வழங்கப்படும் என்றார்.
கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மூலமாகவே பெரும்பாலும் செல்போன்கள் கைமாறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications