மாணவிகளிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்துஅருவருக்கத்தக்க வகையில் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட 55 வயது தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தங்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், அப் பள்ளியில் பயிலும் சில மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். 3வது வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர் எழுத்து மூலமாகபுகார் கொடுத்ததைத் தெடார்ந்து போலீஸார் சுப்பிரமணியனை கைது செய்தனர்.
5ம் வகுப்பு வரையே உள்ள இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகள் வெறும் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர்களிடம் கேவலமாக நடந்துள்ளார் 55 வயது தலைமை ஆசிரியர்.












Click it and Unblock the Notifications