For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன்: குற்றப் பத்திரிக்கை நகலை பெற்றார் ஜெயேந்திரர்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேருக்கு இன்று குற்றப் பத்திரிகைநகல் வழங்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்தைத் தவிர மற்ற 24 பேர் மீதும்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். அப்பு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 18 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸார், கடந்த ஜனவரி 21ம் தேதியன்று 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகை நகல் தயாரிக்கும் பணியையும் போலீஸாரே ஏற்றனர்.

இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இப் பொறுப்பை நீதிமன்றம் ஏற்றது. கடந்த19ம் தேதி முதல் இரவு பகலாக செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நகல் தயாரிக்கும் பணி நடந்தது.

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 3 மாதம் ஆகியும் கூட நகல் வழங்குவது தாமதமாகி வந்தது. 3 முறை நகல்வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டும் வழங்கப்படவில்லை. இந் நிலையில் குற்றப் பத்திரிக்கை நகல்கள் அனைத்தும் பைண்ட்செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந் நிலையில் கடந்த 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயேந்திரர் உட்பட 25 பேரிடமும் 31ம் தேதி (இன்று) கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி அனைவரும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதலில் காலை சுமார் 10 மணியளவில் விஜயேந்திரர் வந்தார்.இதன் பிறகு ஜெயேந்திரர் 10.30 மணியளவில் வந்தார்.

அவர்களுக்கு முன்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற 18 பேரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அனைவரும்நீதிபதி உத்தமராஜன் முன், 12 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சங்கர மடத்தின் வழக்கு செலவுகளுக்காகஇண்டர்நெட் மூலம் நிதி திரட்டிய பக்தரான டாக்டர் பாஸ்கரனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். எனவேஅதுவரை சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

ஆனால் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தும் திட்டம் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துஜெயேந்திரரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதன்பின்னர் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேருக்கும் 1,843 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையின் நகல்களைநீதிபதி உத்தமராஜன் வழங்கினார்.

காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டிருந்தார். அப்ரூவர் ஆகிவிட்டதால் குற்றப் பத்திரிக்கையில்இருந்து அவரது பெயரை போலீசார் நீக்கிவிட்டனர். இதனால் அவருக்கு நகல் வழங்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X