விவேக் ஓபராய் மீது ஜெ. கடும் தாக்கு
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் பெரிய உதவி எதையும் செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாகுறை கூறியுள்ளார்.
பல மாதங்கள் முயற்சித்துப் பார்த்துவிட்டு அமைதியாக அத் திட்டத்தை கைவிட்டுவிட்டு பாண்டிச்சேரி அரசின் உதவியுடன் அம்மாநிலத்தில் சுனாமியால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பட்டினச்சேரி கிராமத்துக்கு உதவப் போய்விட்டார் விவேக் ஓபராய்.
நிருபர்களிடம் இதைத் தெரிவித்த அவர், தமிழக அரசை எந்த விதத்திலும் குறை கூறாமல், நாகரீகமாக தனது தரப்பு நியாயத்தைவிளக்கிவிட்டுச் சென்றார். தமிழக அரசு நிலம் வழங்கவில்லை என்று கூட அவர் கூறவில்லை. நிலம் கிடைக்கவில்லை என நாசூக்காகசொல்லிவிட்டுப் போனார்.
ஆனால், இன்று சட்டசபையில் விவேக் ஓபராயை மிகக் கடுமையாகத் தாக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று அவையில் இந்த விவகாரத்தைக் கிளப்பினார் பாமக தலைவர் ஜி.கே. மணி. அவர் பேசுகையில், எங்கிருந்தோ தமிழர்களுக்கு உதவவந்தார் விவேக் ஓபராய். ஆனால், தேவனாம்பட்டினத்தில் மீனவர்களுக்கு தன் சொந்த செலவில் நிரந்தர வீடுகள் கட்டித் தர அவர் முன்வந்தும் கூட, அதற்கான நிலத்தை ஒதுக்கித் தர அரசு மறுத்துள்ளது என்றார்.
அப்போது இடைமறித்த ஜெயலலிதா,
தேவனாம்பட்டினத்தில் மக்களுக்கு விவேக் ஓபராய் பெரிய உதவி எதையும் செய்திடவில்லை. சிறிய உதவி செய்த அவருக்கு பல மடங்குவிளம்பரம் கிடைத்துவிட்டது. அந்த கிராமத்தில் விவேக் ஓபராய் செய்த பணிகள் வெறும் 10 சதவீதம் தான். மிச்சத்தை மாநில அரசு தான்செய்தது.
அதைக் கூட விவேக் தனது சொந்தப் பணத்தில் செய்யவில்லை. நன்கொடையாளர்களிடம் திரட்டிய நிதியைக் கொண்டு தான் அந்தப்பணிகளைச் செய்தார். ஆனால், அரசாங்கம் செய்த நிவாரண உதவிகளைக் கூட தான் செய்ததாக விளம்பரம் தேடிக் கொண்டார்.
தேவனாம்பட்டினத்தில் குடியிருப்பு கட்ட அவருக்கு நன்கொடை வழங்குவதாக சொன்னவர்கள் அதை வழங்கவில்லை. இதனால் தான்அவர் பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார்.
இதற்கு தமிழக அரசு எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்றார் ஜெயலலிதா.
நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில், இப்போது ஓபராயும் அவரது குழுவினரும் தேவனாம்பட்டினத்தில் மீனவர்களுக்கு அமைத்துத்தந்துள்ள தாற்காலிக குடில்கள் கூட அரசு நிலத்தில் உள்ளன என்றார்.
சுனாமி தாக்கியவுடன் தமிழர்களுக்கு உதவ எங்கிருந்தோ ஓடி வந்து உதவிக் கரம் நீட்டிய ஓபராயை நினைத்தால் மனம் கனக்கிறது. இனிதமிழகத்துக்கு உதவுவது என்றால் மற்ற மாநிலத்தார் தயங்கும் சூழல் உருவாகாதா?. இதை தமிழக அரசு உணருமா?
விவேக் ஓபராய் மீது ஜெ. கடும் தாக்கு












Click it and Unblock the Notifications