• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலப் பிரச்சனை: தேவனாம்பட்டினம் திட்டத்தை கைவிட்டார் விவேக் ஓபராய்!

By Staff
|

சென்னை:

Vivek Oberoi
பாண்டிச்சேரி மாநிலம் பட்டினச்சேரியில் ரூ. 12 கோடியில் அமையவுள்ள மீனவர் குடியிருப்பின் வரைபடத்தைக் காட்டும் விவேக் ஓபராய்

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தில் மீனவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நடிகர்விவேக் ஓபராய் கைவிட்டுள்ளார். அதற்குப் பதிலாக புதுவை மாநலத்தில் தனது திட்டத்தை நிறைவேற்றப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த வீடுகளைக் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கித் தராத காரணத்திலேயே அவர் பாண்டிச்சேரி அரசின்உதவியுடன் நிலம் பெற்று அங்கு வீடுகள் கட்ட முடிவு செய்ததாகத் தெரிகிறது.

தேவனாம்பட்டினம் மீனவர் கிராமத்தை தத்தெடுத்து அதை மேம்படுத்தப் போவதாகக் கூறியிருந்த விவேக்ஓபராய், அங்கு முகாமிட்டு பல்வேறு நிவாரண உதவிகளைச் செய்து வந்தார். தாற்காலிக வீடுகளையும் கட்டித்தந்தார்.

ஆனால், நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறிய விவேக்கால் அதைக் கட்டித் தர முடியவில்லை. இதையடுத்துதங்களை ஓபராய் ஏமாற்றிவிட்டதாக அப் பகுதி மக்களிடையே முனுமுனுப்பு எழுந்தது.

இந் நிலையில் அத்திட்டத்தையே கைவிட்டுள்ளதாக விவேக் ஓபராய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேவனாம்பட்டினம் கிராமத்தில் என்னாலானஅனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துளேன். அந்த மக்கள் மீது எனது அன்பு நிரந்தரமாக இருக்கும்.

தற்காலிக வீடுகளைக் கட்டிக் கொடுத்தது மாதிரி நிரந்தர வீடுகளையும் கட்டிக் கொடுக்கத் திட்டமிட்டுருந்தேன்.இந்த நூற்றாண்டின் மாதிரி வீடுகளாக அவை அமையும் எனவும் தெரிவித்திருந்தேன்.

இத் திட்டத்திற்கு தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் நான் பார்த்து வைத்திருந்த இடங்கள்அனைத்தும் தனியாருக்கு சொந்தமானதாக உள்ளதால் அவற்றில் வீடு கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. (அதாவது,தமிழக அரசு நிலம் ஒதுக்கித் தரவில்லை) எனவே இந்தத் திட்டத்தை கைவிட நேரிட்டுள்ளது.

தற்போது, காரைக்கால் அருகே உள்ள பட்டினச்சேரி கிராமத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளேன். இதற்குபுதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. 10 நாட்களில் எனது திட்டத்தை பரிசீலித்து, அனைத்துஉதவிகளையும் செய்து தந்துள்ளனர். (நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளனர்)

25 ஏக்கர் நிலத்தில தற்போது பூர்வாங்கப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் பிரச்சினை செய்ததால்தான் எனது தேவானம்பட்டனம் ரத்து செய்யப்பட்டதாக கூறுவது தவறு.

அவர்களுக்கும், திட்டம் ரத்தானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனியார் நிலங்களைப் பெறுவதில் சிரமம்ஏற்பட்டதால்தான் திட்டத்தை ரத்து செய்தோம்.

இருப்பினும் நாங்கள் அங்கு பணியாற்றியபோது சிலர் எங்களை அணுகி தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளுமாறு கூறினர். நான் அவர்களை திட்டி அனுப்பி விட்டேன். இதனால் எனக்கும், என்னுடன்இருந்தவர்களுக்கும் மிரட்டல்களும் வந்தன. இதைத் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

மீண்டும் தேவனாம்பட்டினம் செல்ல விரும்புகிறேன். அங்கு போவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

புதுவை பட்டினச்சேரியில் நான் வீடு கட்டத் தேர்வு செய்துள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது. எனவே இத்திட்டத்தில் பிரச்சினை வராது. மேலும் இங்கு கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளை, மீனவர்கள் வேறு யாருக்கும் விற்கமுடியாது.

முதல் கட்டமாக ஒரு அறை, சமையலறை, கழிப்பறை கொண்ட, 800 சதுர அடி அளவிலான 300 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

பெங்களூரைச் சேர்ந்த சைதன்யா பில்டர்ஸ் என்ற நிறுவனம் ரூ. 11 கோடி மதிப்பில் இந்த வீடுகளைக் கட்டிக்கொடுக்கவுள்ளது. அக்டோபர் 15ம் தேதி இந்தத் திட்டம் முடிவு பெறும்.

இந்தக் குடியிருப்பில் அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும். சாலைகள், குடிநீர் வசதி, தெரு விளக்குகள்,விளையாட்டு மைதானம், பள்ளி, கம்ப்யூட்டர் மையம், சமூக நலக் கூடம், ஹோட்டல் என அனைத்து வசதிகளும்நிறைந்ததாக இந்த குடியிருப்பு அமையும் என்றார் விவேக் ஓபராய்.

ஒரு நல்ல மனிதர் எடுத்த நல்ல முயற்சி, தமிழக அரசு நிலம் ஒதுக்காததால், காற்றோடு போய்விட்டது. பாண்டிச்சேரிஅரசாவது முன் வந்து இந்த மனிதரின் நல்ல முயற்சிக்கு கைகொடுத்ததோடு, தனது மீனவர்களுக்கும் நல்லதுசெய்ததே.

விஜய் ரூ.15 லட்சம் உதவி:

Actor Vijayஇதற்கிடையே பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு படகுகள் மற்றும் மீன் பிடிசாதனங்கள் வாங்குவதற்கு நடிகர் விஜய், ரூ. 15லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்.

இப்பகுதியை சேர்ந்த குட்டி ஆன்டி, ராஜேஷ், மாறன், மதி, சாந்த குமார், சிவா ஆகியோர் சென்னைக்கு சென்று விஜய்யை அவரது வீட்டில்சென்று சந்தித்தனர். அப்போது தாங்கள் அனைவரும் சுனாமியால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினர்.

உடனே தனது தந்தையை அழைத்து விஜய் விவரத்தை கூறினார். அவர் உடனடியாக பாண்டிச்சேரியிலுள்ள விஜய் ரசிகர் மன்ற தலைவரைதொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.

இதன் பிறகு அவர்கள் அனைவருக்கும் படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் வாங்க ரூ.15 லட்சத்தை நடிகர் விஜய் வழங்கினார்.

ஓபராய் என்னத்த செஞ்சாரு: நாங்க செய்யாததா...

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X