திமுக மத்திய அமைச்சர்கள் மாற்றம்?: டெல்லி செல்கிறார் கருணாநிதி
சென்னை:
நீண்ட இடைவெளிக்குப் பின் திமுக தலைவர் கருணாநிதி அடுத்த மாதம் டெல்லி செல்கிறார்.
இந் நிலையில் வரும் மே மாதம் கருணாநிதி டெல்லி செல்கிறார்.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் மே 2வது வாரத்தில் நடக்கிறது. அதில் கருணாநிதி பங்கேற்கிறார்.
அதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்தபதவியேற்பு நிகழ்ச்சியிலும் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து மே 22ம் தேதி மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் முதலாமாண்டு நிறைவு விழாகொண்டாடப்படவுள்ளது. இதிலும் பங்கேற்கிறார் கருணாநிதி. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் விடுத்த அழைப்பை கருணாநிதி ஏற்றுக் கொண்டுவிட்டார்.
அமைச்சரவை மாற்றத்தின்போது சில திமுக அமைச்சர்களும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. புதிதாக சிலர் பதவியேற்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் சோனியா காந்தியுடன் கருணாநிதி பேச்சுநடத்தவுள்ளார்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் கருணாநிதி சந்திக்கிறார்.
தொகுதி உடன்பாட்டை முடித்துக் கொண்டுதான் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநில காங்கிரஸ்தலைவர்கள் இதில் தலையிட வாய்ப்பில்லாமல் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை கருணாநிதி ரகசியமாக முடித்து விட்டார் என்று பேச்சு நிலவுவது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் மற்ற தோழமைக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க கருணாநிதி தீவிரமாக உள்ளார்.
கூட்டணியை உடைக்க உளவுப் பிரிவு போலீசார் மூலமாக அதிமுக தீவிரமாக களமிறங்கியிருப்பதால் அதை முறியடிக்க உயர்மட்டத்தில் பிற கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார் கருணாநிதி.
ஆனால், கருணாநிதியின் இந்த முயற்சிகளையும் மீறி தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிமுக பக்கம் போகும் என்றுகருதப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரித்த இந்தக் கட்சியை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும்வேலையில் உளவுப் பிரிவு உதவியோடு அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் இக் கட்சிக்கு திமுக இடம் ஏதும் ஒதுக்கவில்லை. ஆனால், வரும் தேர்தலில் தமுமுகவுக்கு சில தொகுதிகளைஒதுக்கித் தர அதிமுக முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications