இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆசிம் பிரேம்ஜி
லண்டன்:
இந்தியாவிலேயே பணக்கார மனிதர் விப்ரோ நிறுவன அதிபர் ஆசிம் பிரேம்ஜி தான் என லண்டனைச் சேர்ந்த புதிய சக்ஸஸ் 2005வர்த்தக இதழ் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர்ன் ஐ நிறுவனத்தின் புதிய பத்திரிக்கையான இது வெளியிட்டுள்ள செய்தியில்,
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது அம்பானி சகோதரர்கள். முகேஷ் மற்றும் அனிலின் கூட்டு சொத்து மதிப்பு ரூ. 24,172 கோடி.(இவர்கள் விரைவில் பிரியப் போவது வேறு விஷயம்).
பாரதி டெலிகாம் நிறுவனத்தின் தலைவரான சுனில் மிட்டலின் சொத்து ரூ. 12,552 கோடி. மூன்றாவது இடத்தில் இருக்கும் இவருக்கு அடுத்தநிலையில் இருப்பது தமிழரான ஷிவ் நாடார். எச்.சி.எல். நிறுவன அதிபரான இவரது சொத்து ரூ. 7,929 கோடி.
5வது இடத்தில் ரன்பாக்சி மருந்து நிறுவன அதிபர்களான மல்விந்தர், சிவிந்தர் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களது சொத்து ரூ. 5,679கோடி.
சன் பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் திலிப் சங்கவி (ரூ. 4,965 கோடி, 6வது இடம்), ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமாரமங்கலம் பிர்லா(ரூ. 4,172 கோடி, 7வது இடம்), ஹீரோ ஹோண்டா அதிபர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் (ரூ. 2,905 கோடி, 8வது இடம்), ஜீ டிவி அதிபர்சுபாஷ் சந்திரா (ரூ. 2,894 கோடி, 9வது இடம்), சிப்லா மருந்து நிறுவன அதிபர் யூசுப் ஹமீத் (ரூ. 2,846 கோடி, 10வது இடம்).
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் அனில் அகர்வால் (ரூ. 2,619 கோடி, 11வது இடம்), பஜாஜ் நிறுவன அதிபர் ராகுல் பஜாஜ் (ரூ. 2.490கோடி, 12வது இடம்), இந்துஜா சகோதரர்கள் (ரூ. 2,378 கோடி, 13வது இடம்), பயோகான் நிறுவன அதிபர் கிரண் மசூம்தாஸ் ஷா (ரூ.2,106 கோடி, 14 இடம்)
லண்டனில் 6வது பணக்கார ஆசியர் :
அதே போல இங்கிலாந்தின் 6வது மிகப் பெரிய பணக்கார ஆசியர் என்ற இடத்தை லார்ட் பால் பிடித்துள்ளார். கேபாரோ நிறுவனங்களின்அதிபரான அவரது சொத்து மதிப்பு 275 மில்லியன் பவுண்டுகள்.
ஆனால், இந்தப் பட்டியலில் மிட்டல் ஸ்டீல் நிறுவன அதிபரும் 14.8 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களைக் கொண்டவருமான லட்சுமிமிட்டலின் பெயர் இடம் பெறவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications