தாம்பரத்தில் புதிய சர்வதேச விமான நிலையம்: தமிழகம் திட்டம்
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துவிட்டதால் தாம்பரத்தில் 2,000 ஏக்கரில் புதிய விமானநிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விமானத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை அமைப்பதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ளுமாறு மத்திய விமானத்துறை ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தில்,
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாகபெரும் நெரிசல் நிலவுகிறது. இதனால் சென்னையில் புதிய மாபெரும் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
மேலும் சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் புதிய நிறுவனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால்பயணிகள் போக்குவரத்து மேலும் பல மடங்கும் பெருகவுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள விமானத்துறை ஆணையத்தின் திட்டப் பிரிவு இது தொடர்பாக விரிவானஆய்வை நடத்த முடிவு செய்துள்ளது.
இப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 16 சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நடத்திவருகின்றன. வரும் மே 11ம் தேதி முதல் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்சும் சென்னையில் இருந்து அந் நாட்டுக்கு நேரடிவிமான சேவையை தொடங்கவுள்ளது.
வரும் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 9.6 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச முனையத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 10,000 சதுர மீட்டர் பகுதியிலும்விமான நிலையத்தை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 22.48 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சமீபத்தில் பிரதமர் அனுமதியளித்தையடுத்து ஒரு வருடத்தில் இந்தப் பணி நிறைவடையவுள்ளது.
அதே போல மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களை மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |