புதிய தலைமைச் செயலாளர் யார்?
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் லட்சுமி பிரானேஷின்பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்றகேள்வி எழுந்துள்ளது.
தலைமைச் செயலாளராக இருக்கும் லட்சுமி பிரானேஷ், தமிழகத்தின் முதல் பெண்தலைமைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றவர். லட்சுமி பிரானேஷின்பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், அதன் பின்னர் வந்த திமுகஆட்சிக்காலத்திலும் நிதித்துறைச் செயலாளராக பணியாற்றியவர் நாராயணன்.தற்போதைய ஆட்சியிலும் அவர்தான் நிதித்துறைச் செயலாளராக உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி பிரானேஷ் விடுமுறையில் சென்றபோது , தற்காலிகதலைமைச் செயலாளராக நாராயணன்தான் செயல்பட்டார். எனவே அடுத்த தலைமைச்செயலாளர் பதவி அவருக்கேக் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேசமயம், உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் ஜெயந்தி ஆகியோரது பெயர்களும் போட்டியாளர்கள்பட்டியலில் உள்ளது.
இவர்களில் பவன் ரெய்னா 20 ஆண்டு கால டெல்லிப் பணியிலிருந்தவர். அவரைஜெயலலிதா தமிழக அரசுப் பணிக்கு கூட்டி வந்திருப்பதன் மூலம், அடுத்த தலைமைச்செயலாளராக அவரை நியமிக்கும் எண்ணம் இருப்பதால்தான் என்று ஒரு சாரார்கூறுகிறார்கள்.
ரெய்னாதான் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும்இன்னொரு பிரிவினர் கூறுகிறார்கள். அதேசமயம், பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளிலேயே மூத்தவராக உள்ள ஜெயந்திதான் அடுத்த தலைமைச் செயலாளர்என்றும் ஒரு பேச்சு உலவுகிறது.
லட்சுமி பிரானேஷைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பெண்ணைத்தான் ஜெயலலிதாதலைமைச் செயலாளராக நியமிப்பார் என்றும் அதற்குஅவர்கள் காரணம்கூறுகிறார்கள்.
தமிழக அரசின் "ஹாட்"டான பதவியான தலைமைச் செயலாளர் பதவி யாருக்குக்கிடைக்கப் போகிறது என்ற பேச்சுத்தான் இப்போது அதிகாரிகள் மட்டத்தில் நிலவும்சூடான "டாப்பிக்" ஆகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications