ஜெயலட்சுமியின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் ஆகிறது
மதுரை:
ஜெயலட்சுமிக்குக் கொடுக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு மே 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும்போலீஸ் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுக ஜெயலட்சுமி முடிவு செய்துள்ளார்.
ஜெயலட்சுமி மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை அவருக்கு போலஸ் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. வருகிற 4ம் தேதி வரை உயர்நீதிமன்றக் கிளை தேதி குறித்திருந்தது.
தற்போது ஜெயலட்சமி வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஜெயலட்சுமி மீது மட்டும் 6குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 4 வழக்குகளிலும், கோவை மற்றும் திருச்சியில் தலா ஒருவழக்கிலும் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 4ம் தேதியுடன் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்பைநீட்டிக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தை அணுக ஜெயலட்சுமி தரப்பு முடிவு செய்துள்ளது.
வரும் 5ம் தேதி இதுதொடர்பாக மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி சார்பாக பாதுகாப்பு நீட்டிப்பு கோரி மனு தாக்கல்செய்யப்படும் என ஜெயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications