For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி; மந்திரவாதி தலைமறைவு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Manish Sharmaதங்க தோஷ பூஜை செய்வதாக கூறி, பெண்கள், நடிகைகளிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்ட போலி மந்திரவாதியை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்தவர் மனீஷ் சர்மா. எண் கணித ஜோதிடராக அப்பகுதியில் அறியப்பட்டவர், பிரபலமானவர்.இதுதவிர தோஷம் நீக்க பல்வேறு பூஜைகளையும் செய்பவர். இதனால் அப்பகுதி மக்களிடையே இவர் பிரபலமாக இருந்தார்.

நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு உடல் நலமாக வேண்டி இவர் நடத்தும் தங்க தோஷ பூஜை அப்பகுதி மக்களிடையே வெகுபிரசித்தமானது. இவரைப் பார்க்க எப்போதும் கூட்டம் ஜே ஜே என்று காணப்படும். ரூ. 300 கொடுத்தால்தான் மனீஷ், சர்மாவைப்பார்க்கவே முடியும்.

தனக்கு எம்.ஜி.ஆரைத்தெரியும், பல நடிகைகளைத் தெரியும் என்றெல்லாம் இப்பகுதி மக்களிடம் சொல்லி வந்துள்ளார் மனீஷ். அவரதுமனைவி மல்லிகாவும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இவர்களது பில்டப் பேச்சுக்களால் கவரப்பட்ட அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இவர்களிடம் ஜோதிடம் கேட்பதும், குறி கேட்பதும், தங்க தோஷம் கழிப்பதுமாக இருந்துள்ளனர்.

இந் நிலையில் டாக்டர் நிஷா மற்றும் கவிதா ஆகிய இரு பெண்கள், மனீஷ் சர்மா தங்களை மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார்கூறியுள்ளனர். இருவரும் சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர்கள். நிஷா ஹோமியோபதி கிளினிக் வைத்துள்ளார்.

கவிதாவின் கணவருக்கு சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் போயுள்ளது. இதையடுத்து மனீஷ் சர்மாவை சந்தித்து என்ன செய்யலாம்என்று கேட்டுள்ளார். அப்போது எண் கணிதம் பார்த்த மனீஷ் சர்மா, உங்களது கணவருக்கு தங்க தோஷம் உள்ளது. அதாவது அவரதுஉடலிலோ அல்லது வீட்டிலோ தங்கம் இருக்கக் கூடாது. வீட்டில் உள்ள அனைத்துத் தங்கத்தினால் ஆன நகைகள், பொருட்களை 90 நாட்கள்பூஜையில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்க பூஜை:

இதையடுத்து கவிதா 32.5 பவுன் நகைகளை மனீஷ் சர்மாவிடம் கொடுத்தார். அவற்றை ஒரு டப்பாவில் போட்டு மஞ்சள் துணியால் சுற்றிகவிதா வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்தார் மனீஷ் சர்மா.

இந்தச் சமயத்தில் டாக்டர் நிஷாவின் கணவருக்கும் உடல் நலம் சரியில்லாமல் போகவே, தனது தோழி கவிதாவின் ஆலோசனைப்படி மனீஷ்சர்மாவை அணுகி தங்க தோஷ பூஜை செய்யுமாறு கேரினார் நிஷா.

நிஷாவிடமிருந்த 191 பவுன் நகைகளை பூஜை அறையில் வைத்து தங்க தோஷ பூஜை நடத்தினார் மனீஷ் சர்மா. இப்படியாக 3 மாதங்கள்இருவரதுவீட்டிற்கும் வந்து பூஜை நடத்தியுள்ளார் சர்மா. ஒவ்வொரு முறை வரும்போதும் இருவரிடமும் தலா ரூ. 300 காணிக்கையாகவாங்கிக் கொள்வாராம்.

3 மாத பூஜை முடிந்த நிலையில் மனீஷ் சர்மாவும், மல்லிகாவும், நாங்கள் வரும் வரை பூஜை அறையைத் திறக்க் கூடாது. உள்ளே இருக்கும்நகைகளையும் எடுக்கக் கூடாது. நாங்களே வந்து திறந்து நகைகளை எடுத்துத் தருவோம் என்று கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

டப்பாவில் குப்பை:

இந் நிலையில் கவிதாவுக்கு பணத் தேவை ஏற்பட்டதால் நகைகளை விற்க முடிவு செய்தார். ஆனால் நகைகளை நாங்கள் தான் வந்துஎடுத்துத் தருவோம் என்று சர்மா கூறியிருந்ததால், அவரது வீட்டுக்குப் போன் செய்தார். ஆனால் தொலைபேசி இணைப்புதுண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணவாள நகர் விரைந்து சென்று பார்த்தபோது கணவனும், மனைவியும் வீட்டைக்காலி செய்து விட்டுச் சென்றிருந்தது தெரியவந்து அதிர்ந்தார்.

உடனடியாக வீட்டுக்கு ஓடி வந்து நகைகளை எடுத்துப் பார்க்க டப்பாவைத் திறந்தபோது, அதில் ஒன்றும் இல்லாதது கண்டு அதிர்ந்தார்.வெறும் குப்பையை அதில் போட்டு மனீஷ் சர்மா தம்பதியினர் மூடி வைத்திருந்தனர். அதிர்ச்சியில்யடைந்த கவிதா, நிஷாவின் வீட்டுக்குஓடினார். அவரது வீட்டின் பூஜை அறையைத் திறந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த பையைப் பார்த்தபோது அதிலும் குப்பையே இருந்தது.

இருவருமாக சேர்ந்து 223.5 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் உடனடியாக போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் தனிப்படைஅமைக்கப்பட்டது.

திருவள்ளூரில் போலீஸ் படை மாறு வேடத்தில் முகாமிட்டது. இந் நிலையில் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் வைத்து மல்லிகா பிடிபட்டார்.அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு மாதத்திற்கு முன்பே மனீஷ் சர்மா தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், 75 பவுன்நகைகளை ஒரு இடத்தில் அடகு வைத்துள்ளதாகவுகம், மற்ற நகைகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளதாகவும் மல்லிகா தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சர்மா எனது கணவர் அல்ல. எனது உண்மையான கணவர் ஆரணியில்வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு விபத்தில் அவர் இறந்து விட்டார். அவர் மூலம் எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவர்இறந்த பிறகு குழந்தைகளை படிக்க வைத்து வந்தேன். யாரிடமும் அதிகம் பேச மாட்டேன்.

இந் நிலையில் திருவள்ளூரில் உள்ள சாய் ஆசிரமத்திற்கு அடிக்கடி போவேன். அங்கு தான் சர்மாவை சந்தித்தேன். அவரது பேச்சு என்னைக்கவர்ந்தது. தன்னை பெரும் பணக்காரன் என்றும் ஜாம்ஷெட்பூரில் பெரிய கம்பெனி இருப்பதாகவும் என்னிடம் கூறிய சர்மா, கணவரைஇழந்து தவிக்கும் எனக்கு கடைசி வரை துணையாக இருப்பதாக கூறினார். அவரது பேச்சை நம்பிய நான் அவருடன் வந்துவிட்டேன்.

பின்னர் தான் அவர் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரியவந்தது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாததால், அவரது மோசடிச்செயல்களுக்கு துணையாக இருந்து வந்தேன். இப்போது அவமானப்பட்டு நிற்கிறேன்.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் சர்மா எங்கோ போய் விட்டார். சமீபத்தில் போனில் பேசினார். அப்போது, போலீஸ் கெடுபிடி முடிந்ததும்வந்து சந்திப்பதாக தெரிவித்தார். நானும், எனது பிள்ளைகளுடன் பூந்தமல்லியில் உறவினர்களுடன் தங்கியிருந்தேன். இந்த சமயத்தில்திருவள்ளூர் வந்தபோது சிக்கிக் கொண்டேன்.

சர்மாவின் உண்மையான பெயர், ஊர் விவரம் குறித்து எனக்குத் தெரியாது. என்னிடமே அவர் உண்மையைக் கூறியதில்லை என்றுகூறியுள்ளார் மல்லிகா.

மல்லிகாவின் வாக்குமூலத்தையடுத்து மனீஷ் சர்மாவைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவருக்கு தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் என பல மொழிகள் தெரியுமாம். எனவே பல்வேறு பகுதிகளுக்கும் தனிப்படை போலீஸார்விரைந்துள்ளனர்.

பெண்களிடம் அவர் ஏதாவது மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மனீஷ் சர்மாவின்மோசடியில் சில நடிகைகளும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மணீஷ் சர்மா குறித்த துப்பு கிடைத்தால் 044-28555078 என்ற தொலைபேசி எண்ணில் தெவிக்கலாம் என்று மத்திய குற்றப்பிவு போலீஸார்தெவித்தள்ளனர். சர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிவில் புகார் கொடுக்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X