சங்கரராமன்: ஜாமீன் கோரி அய்யர், ரகு மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குண்டர் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யரும், விஜயேந்திரரின்தம்பி ரகுவும், சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் ஏற்கனவே ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அய்யர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு சங்கரராமனை நன்றாகவே தெரியும். அவர் மீது எந்தக்காலத்திலும் எந்தவிதமான விரோதமோ, கோபமோ எனக்கு இருந்ததில்லை.

இந்தக் கொலை வழக்கில் ரவி சுப்பிரமணியமும் கதிரவனும் எனது பெயரையும் சேர்த்துக் கூறியதாக பத்திரிக்கைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

கொலைகாரர்களுக்குப் பணம் தரச் சொல்லியோ, அவர்களுக்கு நேரடியாவோ அல்லது மறைமுகமாக உதவச் சொல்லியோஜெயேந்திரர் எனக்கு எந்த உத்தரவும் போட்டதில்லை. நானும் செய்ததில்லை. இந்தக் கொலையை செய்ய நான் எந்தச் சதியும்தீட்டவும் இல்லை என்று கூறியுள்ளார் அய்யர்.

ரகு தாக்கல் செய்துள்ள மனுவில்,

இந்த வழக்கில் என்னைத் தொடர்புப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. என் மீதும் ஜெயேந்திரர் மற்றும் மடத்தின் ஆட்கள் மீதுபோடப்பட்டுள்ள இந்த வழக்கே பொய்யானது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+