For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி வரலாற்றில் வெற்றி, தோல்வி சகஜம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:


காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார். மேடையில் வேட்பாளர் பி.எம். குமார்,வைகோ, ஜி.கே.வாசன், வரதராஜன், துரைமுருகன், ஸ்டாலின் மற்றும் பலர்

காஞ்சிபுரம் வரலாற்றில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். முன்பு தோற்றோம், இப்போது வெற்றி பெறுவோம் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.எம்.குமாரை ஆதரித்து கருணாநிதியும், கூட்டணிக் கட்சிகளின்தலைவர்களும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினர்.

இந்தப் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் நான் உங்களைபார்க்கும்போது தமிழகத்தில் எங்கும் பெறாத உணர்ச்சியை, உணர்வை இங்கு பெறுகிறேன். இந்தக் கூட்டம் கூட்டிவரப்பட்டதல்ல, தானாக வந்த கூட்டம்.

காஞ்சிபுரம் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்காலத்தில் கூட வெற்றி, தோல்வி மாறி மாறி வந்துள்ளது.

எனவே ஒரு முறை தோற்றால் அது நிரந்தரமானதாக இருந்ததில்லை. முன்பு இங்கு தோற்றோம். இப்போது வெற்றி பெறுவோம்.இதை உங்களது மலர்ந்த முகம் தெரிவிக்கிறது.

திமுக ஆட்சியில் தான் காஞ்சிபுரத்தில் நிலவி வந்த கடும் குடிநீர்ப் பிரச்சினைக்கு, கடந்த 1989ம் ஆண்டு முடிவு கட்டப்பட்டு, ரூ.35 கோடி செலவில் திருப்பாற்கடல் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு வேட்பாளர்குமாரின் தந்தையார் முருகேசன் முக்கியக் காரணமாக இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதேபோல, காஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரூ. 40 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டது,காஞ்சிபுரம் பஸ் நிலையம் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது ஆகியவையும் திமுகஆட்சியில்தான், முருகேசனின் முயற்சியினால் தான்.

ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சி இன்று நடந்து கொண்டுள்ளது. மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில்பேசுவதில்லை, பேசவும் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் தான் நான் சட்டசபைக்கே போவதில்லை.

நமக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. திமுக மற்றும் தோழமைக் கட்சிகள், அகிம்சை வழியில் நம்பிக்கை வைத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதை ஜனநாயக ரீதியில் கொண்டு வர வேண்டும்.

உடலில் கடைசி மூச்சு, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்என்று உங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பேன். இதைப் புரிந்து கொள்ளாமல் தவறாக, தரக்குறைவாக பேசுகிறார்கள்.

பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம், மக்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது நடக்காதுஎன்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இந்த தேர்தல் ஜெயலலிதாவுக்கும், நமக்கும் இடையிலான போட்டி அல்ல,ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடைய நடக்கும் போட்டி என்று பேசினார் கருணாநிதி.

வைகோ, ராமதாஸ்:

கூட்டத்தில் வைகோ பேசுகையில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 20,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படிச்செய்ய அதிகாரிகளுக்கு எப்படி தைரியம் வந்தது? தில்லு முல்லுகளினால் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற முடியாது.

அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் மிகவும் கஷ்டத்தை அனுபவித்துள்ளார்கள். எனவே அவர்களது ஓட்டு உதயசூரியனுக்குத்தான். இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பார்கள், இது காலத்தின் கட்டாயம் என்றார்.

ராமதாஸ் பேசுகையில், இரு தொகுதிகளிலும் மக்களிடையே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பெரும் எழுச்சி காணப்படுகிறது. இருதொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்கள் என்றார்.

ஜி.கே.வாசன் பேசுகையில், மத்திய அரசு தமிழக நலனிலே அக்கறை காட்டுவதில்லை என்று முதல்வர் புகார் கூறுவதுபொய்யானது. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்திலே, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. தமிழைசெம்மொழியாக அறிவித்தது மத்திய அரசுதான்.

சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்ததும் மத்திய அரசுதான். சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கும் அனுமதிஅளித்தது மத்திய அரசுதான்.

நான்கு ஆண்டுகளாக தமிழக அரசால் செய்ய முடியாததை ஒரு ஆண்டிலேயே மத்திய அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளதுஎன்றார் வாசன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் உள்ளிட்ட பல்வேறுதலைவர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X