ரஷ்ய பெண்களுடன் ஆதி போட்ட குஜால் ஆட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தனிப்படை போலீஸாடம் சிக்கியுள்ள ஆதிகேசவனின் வலது கரமான ஜெயவீரன் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆதி கேசவன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை ஜெயவீரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆதியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர், சேலம், ஒரிஸ்ஸா, குஜராத்தைச் சேர்ந்த 4 தொழிலதிபர்கள் தற்கொலை செய்துகொண்ட விவரத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

மோசடி மன்னன் ஆதிகேசவனின் நெருங்கிய கூட்டாளியாகவும், அவருக்கு வலது கரம் போலவும் திகழ்ந்தவர் ஜெயவீரன். ஆதிகேசவன் கைது செய்யப்பட்ட பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். ஜெயவீரனை தீவிரமாக தேடி வந்த போலீஸார் மைசூரில்உள்ள அவரது பெண் தோழியான வள்ளி என்பவரின் வீட்டில் வைத்து பிடித்தனர்.

சென்னைக்குக் கொண்டு வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் புதன்கிழமை இரவு அவரை கைது செய்வதாகபோலீசார் தெரிவித்தனர். ஆதிகேசவன் குறித்த பல தகவல்களை ஜெயவீரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயவீரன், ஆதி கேசவனிடம் ரூ. 4 லட்சம் கொடுத்து ஏமாந்தவர். சென்னை துறைமுகத்தில் 4பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 4 லட்சம் பணத்தை ஜெயவீரனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆதிகேசவன்,அப்படிச்செய்யாமல் ஏமாற்றி விட்டார். பணத்தைக் கேட்பதற்காக சென்னைக்கு வந்த ஜெயவீரனை, வழக்கம் போல மூளைச்சலவை செய்து தனது கூட்டாளியாக மாற்றிக் கொண்டார் ஆதி.

ஜெயவீரன் ஆரம்பத்தில், பாளையங்கோட்டை சித்த வைத்திய கல்லூரியில் ஊழியராக இருந்தவர். ஆதியிடம் சேர்ந்த பிறகுவேலையை ராஜினாமா செய்து விட்டார். ஜெயவீரனுக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

அதன் பின்னர் ஆதியின் நிழலுக வேலைகளுக்கு உதவியாக இருந்து வந்தார் ஜெயவீரன். ஆதியைப் போல ஒரு மோசடிப்பேர்வழியை இதுவரை தான் பார்த்ததே இல்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளாராம் ஜெயவீரன்.

மோசடி மூலம் ஆதிகேசவன் பல கோடிகளை சம்பாதித்தார் என்றும் அது கணக்கு வழக்கே கிடையாது என்றும் கூறியுள்ளார்.

ஆதி கேசவன், தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும், தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார் என்றும் மாதம் ரூ.20,000 சம்பளம் கொடுத்ததாகவும் ஜெயவீரன் கூறியுள்ளார்.

தான் சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், போலீஸ் நெருக்கடியிலிருந்து தப்பவும் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்துஎம்.பி. ஆக ஆதிகேசவன் முயன்றதாகவும், தனது மகனை எம்.எல்.ஏ. ஆக்க முயற்சி செய்து வந்ததாகவும் ஜெயவீரன்கூறியுள்ளார்.

ஆதிகேசவனால் ஏமாற்றப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஷீலா ராணி என்ற பெண் டாக்டர், சேலத்தைச் சேர்ந்த இரும்புதொழிற்சாலை அதிபர், குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த மித்தல் சந்த் ஆகிய 4 பேரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற திடுக்கிடும் தகவலையும் கூறியுள்ளார் ஜெயவீரன்.

அத்தோடு "பொம்பள ஷோக்கும்" கொண்டவராம் ஆதி. டெல்லிக்கு சென்றால் ரஷிய நாட்டுப் பெண்களை வரவழைத்து இன்பம்அனுபவிப்பாராம்.

இன்டர்நெட் மூலமான விபச்சாரப் புரோக்கர்கள் உதவியுடன் இந்த ரஷ்ய பெண்களை வரவழைத்து குஜால் செய்தார் ஆதி என்றுகூறியுள்ளார் ஜெயவீரன்.

இப்படி ஆதி குறித்த பல பரபரப்புத் தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ள ஜெயவீரனை இன்று நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்கவுள்ளனர்.

மொத்தம் 26 வழக்குகள்!: ஆணையர் தகவல்!!

இதற்கிடையே மோசடி மன்னன் ஆதிகேசவன் மீது 26 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நடராஜ் பேசுகையில், ஆதிகேசவன் மீது இதுவரை 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து புகார்கள்வந்த வண்ணம் உள்ளன.

பொறியியல் கல்லூரி விடைத்தாள் திருத்த மோசடியில் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பதுதெரியவந்துள்ளது.

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் 7 குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில்2 குழந்தைகளின் இருப்பிடத்தை தற்போது கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

நள்ளிரவில் வீட்டில் நுழையும் போலீஸ்: போலீஸ் மீது ஆதிகேசவன் மனைவி, மகள் குற்றச்சாட்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+