For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியாளர்கள் மிரட்டுகிறார்கள்: விஜயகாந்த் ஓலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vijaykanthஆட்சியில் இருப்பவர்களால் எனக்கு மிரட்டல்கள், உருட்டல்கள் வருகின்றன. "பவரைக்" கொண்டு என்னை மிரட்ட நினைத்தால்அது பலிக்காது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

முதலில் திமுக அனுதாபியாக இருந்த விஜய்காந்த், பின்னர் அதிமுக பக்கமாக சாய்ந்தார். இதனால் விஜய்காந்துக்கு பலவிதங்களிலும் ஆளும் தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்தது.

இந் நிலையில் தனிக்கட்சி தொடங்குவதில் தீவிரமானார் விஜய்காந்த். கிராம மக்களின் சினிமா ஓட்டுக்களையே பெரிதளவில்நம்பியிருக்கும் அதிமுகவுக்கு இதன் மூலம் கிலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து விஜய்காந்துக்கு நேரடியாகவேமிரட்டல்கள் விட ஆரம்பித்துள்ளனர்.

அதே போல திமுக தரப்பில் இருந்தும் விஜய்காந்துக்கு எச்சரிக்கை தரப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்கள் மத்தியில் உள்ளசில துறைகள் மூலமாக விஜய்காந்துக்கு மறைமுகமாகத் தொல்லை தந்து வருகின்றனர்.

இந்த விஷயங்கள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வந்தாலும், அதை இத்தனை நாட்களாக வெளியில் சொல்லாமல் அமுக்கிவைத்திருந்தார் விஜய்காந்த்.

இந் நிலையில் விஜயகாந்த் ரசிகர் மன்றம், டால்மியா ஹெர்பல் நிறுவனம் மற்றும் அப்பாசாமி கண் மருத்துவமனை ஆகியவைஇணைந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் திருமண மண்டபமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில்இலவச கண் சிகிச்சை காமை நடத்தினர்.

இந்த முகாமை தொடங்கி வைத்து விஜயகாந்த் பேசுகையில்,

நான் அரசியலுக்கு வருவது குறித்து சிலர் கேலி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் ஜெயிப்பாரா, நிற்பாரா, உட்காருவாரா என்றுகாமெண்ட் அடித்து வருகிறார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.

இப்போது யாரும் எதுவும் சொல்லட்டும். அதுகுறித்து ரசிகர்கள் கவலைப் படத் தேவையில்லை. சட்டசபைத் தேர்தலில் நமதுபலத்தைக் காட்டுவோம்.

அரசியலுக்கு வருவது என்று ஆகி விட்டது. இந்த கேலிக்கெல்லாம் பயப்படக் கூடாது. சிலர் பயமுறுத்துவார்கள், உங்களைவிலைக்கு வாங்க முயற்சிப்பார்கள், அதைத் தருகிறோம், இதைத் தருகிறோம் என்று ஆசை காட்டுவார்கள். ஆனால் எதற்கும்நீங்கள் அசைந்து கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.

உங்களது துணையுடன்தான் நான் அரசியலுக்கே வருகிறேன். எனக்கும் சில உருட்டல், மிரட்டல்கள் வருகின்றன. ஆட்சியில்இருப்பவர்களால் எனக்கு சில மிரட்டல்களும் வந்தவண்ணம் உள்ளன

ஆட்சியில் இருப்பதால், பவர் இருப்பதால், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதுஎன்னிடம் பலிக்காது.

அரசியலில் தோல்வி அடைந்த நடிகர்களுடன் மட்டும் அரசியலுக்கு வரப் போகிறவர்களை ஒப்பிடக் கூடாது. வெற்றிஅடைந்தவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன கிழித்து விடப் போகிறார் என்றுகூறுகிறார்கள். ஏன் மாற்றம் வரக் கூடாதா?

நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை (அப்புறம் எதுக்கு அரசியலுக்கு வர்றாராம்?). பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்குவரவில்லை. நான் சம்பாதித்தேன், அதை கட்சி நடத்தி அழிக்கப் போகிறேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்சிநடத்துவது சாதாரண விஷயமில்லை.

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இந்த கல்யாண மண்டபம் கட்சி அலுவலகமாக செயல்படத் தொடங்கும்.

நான் எந்தக் கட்சியிலும் இணைய மாட்டேன். அதுபோல வரும் செய்திகளை ரசிகர்கள் நம்ப மாட்டார்கள். எனது ரசிகர்களையும்,மக்களையும் நம்பி கட்சியை தொடங்குகிறேன். கட்சியின் பெயர், கொடி ஆகியவை செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெறும்மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த்.

ஆட்சியில் இருப்பவர்களால் மிரட்டல் வருகிறது என்று கூறுகிறீர்களே, யார் உங்களை மிரட்டியது, அதிமுகாவா என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, மாநிலத்தில் மட்டுமா ஆட்சியாளர்கள் உள்ளனர், மத்தியிலும் தானே ஆட்சியாளர்கள் உள்ளனர்என்று விஜயகாந்த் கூறினார்.

என்னை மூத்த அரசியல் தலைவர்கள் வழி நடத்துகிறார்கள் என்று கூறுவது தவறு. யாருடைய வழி நடத்துதலின் பேரிலும் நான்செயல்படவில்லை. இருப்பினும் பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள்.

கட்சி நடத்த பணம் முக்கியம் என்று கூற முடியாது. கட்சி ஆரம்பிக்கும்போதே ஏராளமான பணத்துடன்தான் ஆரம்பிக்க முடியும்என்ற அவசியம் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எனது கட்சியின் மகளிர் அணியைப் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

கட்சி தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் விரும்பினால் ரசிகர் மன்றம் தனியாகவே செயல்படும். எனது கட்சியில் பிற கட்சிகளைச்சேர்ந்தவர்கள் சேர விரும்பினால் சில கட்டுப்பாடுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அடுத்த சட்டசபைத் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். அரசியலுக்கு வர முடிவு செய்த பின் ஒவ்வொரு முடிவையும்மிகுந்த நிதானத்துடன், கவனத்துடன்தான் எடுத்து வருகிறேன் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X