For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார்: செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பீகாரில் சட்டசபை கலைக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும்மெஜாரிட்டி கிடைக்காததால் கடந்த மார்ச் 7ம் தேதி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் ஆதரவுடன் லாலுவும் ஆட்சியமைக்கமுயன்றனர். 29 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஸ்வானின் லோக் ஜன சக்தியின் ஆதரவில்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்றநிலை இருந்தது.

ஆனால் நிதீஷ் குமாருக்கோ, லாலுவுக்கோ ஆதரவளிக்க பாஸ்வான் மறுத்து விட்டார்.

இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பீகார் அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. பாஸ்வான் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர்தனி அணியாக பிரிந்து சென்று ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாருடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை வியாபாரம் சூடுபிடித்தது. இது பற்றி மத்திய அரசுக்கு கவர்னர் பூட்டா சிங் கடிதம்எழுதினார். பீகாரில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை வியாபாரம் நடந்து வருகிறது. எனவே பீகார் சட்டசபையை கலைத்துவிடுங்கள் என்று பூட்டா சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு அவசரமாக கூடியது. இரவு 2மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பீகார் மாநில சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு சிபாரிசு செய்யமுடிவெடுக்கப்பட்டது.

இது பற்றி ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல்அளித்தார். இதைத் தொடர்ந்து பீகாரில் சட்டசபை கலைக்கப்பட்டது.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகையில், பீகார் மாநிலத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலநிகழ்ச்சி நடைபெறுவதாக கவர்னர் பூட்டாசிங் கடிதம் எழுதியிருந்தார்.எனவே கவர்னரின் சிபாரிசை ஏற்று பீகார் சட்டசபையை கலைக்கமத்திய அரசு முடிவெடுத்தது என்றார்.

இதற்கிடையே பீகார் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷனரிடம் கேட்கப்பட்டபோது, குடியரசுத் தலைவர்ஆட்சி அமுல்படுத்தப்பட்ட மார்ச் 7ம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றார்.

எனவே செப்டம்பர் மாதத்திற்குள் பீகாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

பாஜக போராட்டம்:

பீகார் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக முடிவு எடுத்துவிட்டதாக கூறி பாஜக போராட்டம் நடத்துகிறது. இன்று பீகார் முழுவதும்முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X