பீகார் தேர்தலுக்கு ரூ.500 கோடி செலவாகும்

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பீகார் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்துவதற்கு ரூ. 500 கோடி செலவாகும் என்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம்உள்ளிட்டவைகளுக்காக ரூ. 2000 கோடி வரை செலவிடப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதாக காரணம் கூறி பீகார் மாநில சட்டசபையை மத்திய அரசு கலைத்து விட்டது. இதன் மூலம் மீண்டும்ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு பீகார் மாநிலம் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் மோசமான கல்வியறிவு, ஏழ்மை, வறுமை என மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பீகார் மாநிலத்தில்சட்டசபைத் தேர்தலை நடத்த ரூ. 500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 60 கோடியை மட்டுமே மத்தியஅரசு வழங்கும். மீதமுள்ள ரூ. 440 கோடியை மாநில அரசே ஏற்க வேண்டும்.

ஏற்கனவே பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் இருக்கும் பீகார் மாநில அரசுக்கு இந்த திடீர் மற்றும் தேவையில்லாத நிதிச்செலவீனத்தால் பெரும் சிக்கல் எழும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இது தவிர, அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் பிரசாரம், தலைவர்களின் வருகை, வாகனங்களுக்கான செலவுகள் உள்ளிட்ட தேர்தல்பணிகளுக்காக ரூ. 2000 கோடி வரை செலவிடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தைப் பொருத்தவரை அங்குள்ள மக்களில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தான் வாழுகின்றனர். அடிப்படைவசதிகள் அனைவருக்கும் அங்கு கிடையாது. 20 சதவீதம் மக்கள் மட்டுமே, ஓட்டு வீடுகளில் வசிக்கிறார்கள். 40 சதவீதம் பேருக்கு மட்டுமேநல்ல குடிநீர் வசதி கிடைக்கிறது. 5 சதவீதம் பேர் மட்டுமே கழிப்பிட வசதியுடன் வாழ்கிறார்கள்.

இப்படி பல வகைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் பீகாரில், அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற விளையாட்டுக்களின்காரணமாக மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் பீகார் பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.

பீகார்: செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+