நகை மோசடி: ஜெயலட்சுமிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
மதுரை:
மதுரையைச் சேர்ந்த நகைக் கடை அதிபர்களிடம் நகை வாங்கிக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்தது தொடர்பான வழக்கில்மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிவகாசி ஜெயலட்சுமிக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்சமீபத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்தது. இந்த வழக்கில் ஜெயலட்சுமி, இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று குற்றப்பத்திரிக்கை நகலை வாங்கிக் கொள்ள வருமாறு 3 பேருக்கும் நீதிபதி அய்யாச்சாமி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி அய்யாச்சாமி வழங்கினார்.
வழக்கு விசாரணையை ஜூலை 4ம்தேதிக்கு நீதிபதி பின்னர் ஒத்திவைத்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |