மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு
மேட்டூர்:
கபினியிலிருந்து மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ள நீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்வேகமாக உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் 25,000 கனஅடி நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 2 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 20,000 கன அடி நீர்வந்துகொண்டுள்ளது.
தொடர்ந்து 3 வாரங்களுக்கு இதேபோல நீர் வரத்து இருந்தால் மேட்டூர் அணையைத் திறப்பதற்குத் தேவையான 90 அடி நீர்அளவை எட்ட முடியும்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |