லண்டன் குண்டு வெடிப்பு: பாகிஸ்தானியர்களே காரணம்
லண்டன்:
லண்டனில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் இங்கிலாந்தில் பிறந்த பாகிஸ்தானைசேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இவனுக்கும் பின் லேடனின் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்புஇருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பெயர் ஹாசிப் உசேன், முகமது சித்திக் கான், செஹ்சாத் தன்வீர் மற்றும் இஜாஸ் பயஸ். குண்டு வெடிப்பில் இவர்கள் 4பேரும் பலியாகி விட்டனர். இந்த நால்வரும் பாகிஸ்தானியர்கள். இவர்கள் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.
இவர்களில் தன்வீர் மற்றும் ஹாசிப் உசேன் ஆகிய இருவரும் கடந்த வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் பிடியில்சிக்கியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீஸார் விட்டுவிட்டனர்.
முகமது சித்திக் கான் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை மணந்துள்ளான். இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது.
இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் வசித்து வந்த சித்திக் கான் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துவந்தான். இவன் மிகவும் சாதுவானவன், பள்ளிக் குழந்தைகளுடன் மிகவும் அன்பாகப் பழகி வந்தான் என்று அப்பகுதியைசேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
சாதிக் கான் குறித்து லண்டன் போலீஸார் குஜராத் மாநில போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சாதிக்கானின் மாமியார் பரீதாவிடம் குஜராத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிதாவின் மேலும் 3 மருமகன்களையும் போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இவர்களுக்கும் குண்டுவெடிப்பில் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவன் குறித்தும் தற்போதுதெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த இவனுக்கு 30 வயது இருக்கும் என்று போலீஸார்கருதுகின்றனர்.
கடந்த மாதம் லண்டன் துறைமுகம் வழியாக வந்த இவன், குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டி விட்டு குண்டு வெடிப்புநடப்பதற்கு முந்தைய நாள் இங்கிலாந்திலிருந்து வெளியேறி விட்டான் என்று டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
இவர்கள் தங்கியிருந்த இடங்களை போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர். குண்டு வெடிப்பில் பலியான தீவிரவாதிகளின்உடல்களின் அருகே அவர்களது கிரடிட் கார்டுகள் கிடந்தது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸார் லீட்ஸில் வசித்து வந்த எகிப்தை சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியருக்கும் இந்தகுண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது. 33 வயதான இவரது பெயர் அஸ்தே நாசர். லீட்ஸ் கல்லூரியில்வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீட்டில் இருந்து வெடிபொருட்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தனது விசாவில் பிரச்சினை இருப்பதாக கூறிசமீபத்தில் தான் இவர் இங்கிலாந்திலிருந்து வெளியேறினார். இவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து ஸ்காட்லாண்ட்யார்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |