குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்க தமுமுக கோரிக்கை
சென்னை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 கைதிகளையும் தமிழக அரசுவிடுதலை செய்ய வேண்டும் என தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோரியுள்ளது.
7 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைபட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனைத்துவழக்குகளும் மிக மெதுவாக நடந்து வருகின்றன. இவர்களுக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவைமீறும் செயலாகும்.
மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது. அவரை சிறையில் மிகவும்மோசமாக நடத்துகின்றனர். இதற்குப் பொறுப்பேற்று, சிறைத்துறை டிஐஜி எஸ்ரா, கோவை சரக டிஐஜி இளவரசன் ஆகியோரை தற்காலிகபணிநீக்கம் செய்ய வேண்டும். இருவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அன்சாரி.
