இன்று சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென் :
இன்று மாலை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதை சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் வெறும்கண்களால் பார்க்கலாம்.
சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் வழக்கமாக ஆறுமாத இடைவெளியில் வரும். தற்போது ஒரே மாதத்தில் 2கிரகணங்களும் வருவது ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இன்று மாலை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இவ்வாறு இரண்டுகிரகணங்களும் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது.
இன்று சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தின் மீனம், மேஷ ராசியில் 5வது ஜாமத்தில் நிகழ்கிறது. மாலை 5.04மணிக்கு தொடங்கி 6.03க்கு நிறைவு பெறுகிறது.
தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் ஆகம விதிப்படி சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று நடைசாற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications