For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை மேம்படுத்த பிரமாண்ட திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பிரமாண்டமான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

சென்னை நகரின் மக்கள் தொகை 1 கோடியை நோக்கி சென்று கொண்டுள்ளது. நகரில் தற்போது 32 லட்சம்வாகனங்கள் உள்ளன.

இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னையைக் காக்க புதிய சாலை அமைப்புத் திட்டங்கள்போடப்பட்டுள்ளன. அதன்படி,

கூவம், பக்கிங்காம் கால்வாயை கான்கிரீட் தளத்தால் மூடி அதற்கு மேல் சாலை போடுவது அல்லது கூவம்,பக்கிங்காம் கால்வாய் ஓரங்களை இருபுறமும் அகலப்படுத்தி அதில் சாலை அமைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பாரிமுனையிலிருந்து பூந்தமல்லி வரை இப்போதைய சாலையின் மேல் பறக்கும் சாலை (பிளை ஓவர்)அமைக்கவும், துறைமுகத்திலிருந்து முட்டுக்காடு வரை கடலில் மேம்பாலம் கட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே போல சென்னை நகரை வர்த்தக நகர், நிர்வாக நகர் என இரண்டாகப் பிரிக்கவும், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ளதைப் போல அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை ஒரே இடத்தில் இருக்குமாறுமாற்றி அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பாரிமுனை, தியாகராயநகர், புரசைவாக்கம் போன்ற வர்த்தக மையங்களிலும் ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்திவைக்க மாபெரும் அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், தி.நகரில் பனகல் பூங்கா அருகே 7 மாடியில் வாகன வளாகம் அமைக்கும் திட்டம் விரைவில்தொடங்கவுள்ளது. இதே போல பாரிமுனையிலும் ஒரு பிரமாண்ட பார்க்கிங் வளாகம் அமைக்வும்திட்டமிடப்பட்டுள்ளது.

வட சென்னையில் கண்டெய்னர் லாரிகள் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை வழியாக துறைமுகத்துக்குள் சென்று வரஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் பற்றி அரசு இப்போது ஆராய்ந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X