For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் தேர்தல்: தமிழர்கள் ஒட்டுமொத்த புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்தது. இந்தத் தேர்தலை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப்புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை.

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் முழுமையாக இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். அரசுக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் பெரும்பாலான தமிழர்கள் வாக்களிக்கவில்லை.

இலங்கையின் 5வது ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் 13 பேர் இருந்தாலும் இலங்கை சுதந்திரா கட்சியின் சார்பில்போட்டியிடும் பிரதமர் ராஜபக்ஷேவுக்கும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கும்இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

சிங்களர்களின் வாக்குகளை ரணிலும் ராஜபக்ஷேயும் சமமாகப் பிரிப்பர் என்று கருதப்பட்ட இந்தத் தேர்தலில் வெற்றிதோல்வியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்காகவே இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழர்கள் இந்தத் தேர்தலைஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டனர்.

சுமார் ஒரு கோடியே 33 லட்சம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 10,486 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

யாழ்பாணத்தில் 7,01,938 பேருக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வெறும் 1,465 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

முகமலையில் 91,000 பேர் வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் ஒரே ஒருவர் மட்டும் ஓட்டு போட்டார்.ஓமந்தையில் 84,000 மக்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வெறும் 4 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

இதன்மூலம் இந்தத் தேர்தலை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.

இதற்கிடையே தேர்தலையொட்டி நடந்த வன்முறைகளில் 8 பேர் பலியாயினர். கிழக்கு இலங்கையில் கார் வெடிகுண்டுவெடித்ததில் 2 பேர் பலியாயினர். பலியான இருவரும் விடுதலைப் புலிகளாவர் என கிழக்குப் பகுதிக்கான காவல்துறை டிஐஜிதர்மரத்னா கூறினார்.

நேற்று நடந்த மோதல்களில் 2 விடுதலைப் புலிகள், 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர்படுகாயமடைந்தனர். மட்டக்களப்பில் 2 வாக்குச் சாவடிகள் மீது நடந்த கிரனைட் குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும் ஒருபோலீஸ்காரரும் காயமடைந்தனர்.

திம்புலகலா என்ற இடத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.கலிமுனை என்ற இடத்தில் ஒரு போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வலச்சேனை என்ற இடத்தில் இரு விடுதலைப் புலிகளின் உடல்கள் குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டன. அவர்களை சுட்டதுயார் என்று தெரியவில்லை. திரிகோணமலையில் ஒரு சிங்களரும், கலிமுனை அருகே ஒரு முஸ்லீம் வாலிபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பதால், அவர்களை ஓட்டுச் சாவடிகளுக்குவர விடாமல் அச்சுறுத்தவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வாக்குச் சாவடிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. ஆனால், அப் பகுதி மக்கள் ராணுவகட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து மக்களை வாக்களிக்க அழைத்து வர ஏராளமான அரசு பஸ்கள், டிராக்டர்கள்அனுப்பப்பட்டன. ஆனால், அதில் யாரும் ஏறவில்லை. அந்த வண்டிகள் காலியாகவே திரும்பிச் சென்றன.

சிங்களர்களின் வாக்குகளை ரணிலும் ராஜபக்ஷேயும் சமமாகப் பிரிப்பர் என்ற நம்பப்படும் இந்தத் தேர்தலில் வெற்றிதோல்வியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்காகவே இருக்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தேர்தல் முடிவும் நாளையே தெரிந்துவிடும்.

வாககுப் பதிவை தமிழர்கள் புறக்கணித்ததால் தேர்தல் முடிவுகள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பாதமாக அமையும் என்றுகருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X