For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் புகுந்தது காவிரி: ஊரெல்லாம் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் வீடுகளில் நீர் புகுந்ததால் மாநகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள
சிறுவர்கள்
காவிரிக் கரைகள் உடைந்து திருச்சி நகருக்குள் இன்று மீண்டும் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள்வெளியேறி வருகின்றனர்.

காவிரியில் பெரும் வெள்ளம் அடித்துக் கொண்டு ஓடுகிறது. பல இடங்களில் கரைகள் உடைந்துவிட்டன. இத்தோடு பல்வேறுகண்மாய்களும், 28 ஏரிகளும் உடைந்துவிட்டன. இதனால் காவிரி வெள்ளமும் ஏரி, கண்மாய் நீரும் திருச்சி நகருக்குள் புகுந்துநகரை தத்தளிக்க வைத்துள்ளது.

கோராைற்றில் உடைப்பு ஏற்பட்டதால் கருமண்டபம், பெரியமிளகுப்பாறை, செல்வநகர், எடமலைப்பட்டிப் புதூர், பொன் நகர்,அரியமங்கலம் ஆகிய பகுதிகள் வெள்ளக் காடாகிவிட்டன. இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்துள்ளது.

Trichy sattiram busstand
எடமலைப்பட்டிப் புதூர் அருகே சாலை முழுவதுமாக அரிக்கப்பட்டுவிட்டது. இதனால் திருச்சி-மதுரை சாலையில்துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம் மொத்தமாக நீரில்மூழ்கிவிட்டது.

ஸ்ரீரங்கத்திலும் காவிரி வெள்ளம் புகுந்துள்ளது. அங்குள்ள அம்மா மண்டபம் பாதிக்கும் மேல் மூழ்கிவிட்டது. வெள்ளத்தால்மீண்டும் சூழப்படும் சூழல் உள்ளதால் பலரும் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அத்தோடு கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் கரைகளில் வசிப்போர் வெளியேறுமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏரிகள் உடைந்ததால் அதிலிருந்து வெளியேறிய நீரால் சுமார் 100 கிராமங்கள்மூழ்கியுள்ளன. இக் கிராம படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Cavery in Trichy
அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்புக்கு வந்து கொண்டுள்ளது. இங்கு வினாடிக்கு 1.15லட்சம் கன அடி நீர் வருகிறது. இந்த நீர் காவிரியாற்றிலும் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் காவிரி வலது கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் சமயபுரத்தில் மாணிக்கபுரம் சாலை, கீழக்கல்லக்குடிசாலைகளை அரித்துவிட்டது.

திருச்சி-சிதம்பரம் சாலையில் வெள்ளனூரிலிருந்து, இருதயபுரம் வரை பல கி.மீ. தூரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால்போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அதே போல செங்கிபட்டி ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், திருச்சி-தஞ்சாவூர்சாலையும் நீரில் மூழ்கிவிட்டது.

Cavery in Trichy
சமயபுரம் கோயிலுக்குள் நீர்:

கனமழையால் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

கோயிலைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் குளங்கள் நிரம்பி வழிவதாலும், பெருவளை வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்புகாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள் நீர் புகுந்தது.

இதற்கிடையே துறையூர் அருகே இரு பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

லால்குடி அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லால்குடியில் திடீர்சாலை மறியல் செய்தனர்.

திருச்சியில் வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியைச் சுற்றிய 70 கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

கன மழை காரணமாக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நிரம்பிவிட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வீராணம்ஏரிக்கு வினாடிக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஏரியிலிருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த நீர் கால்வாய்களை உடைத்துக் கொண்டு காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், பரங்கிபேட்டை ஆகிய பகுதிகளுக்குள்நுழைந்துவிட்டது. இதனால் அப் பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மாவட்ட கலெக்டர் ககன்தீப்சிங் பேடிஉத்தரவிட்டுள்ளார்.

கரூர்:

அதே போல கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தை வெள்ளம் உடைத்துச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X