For Quick Alerts
For Daily Alerts
ஆடிட்டருக்கு அடி: ஜெயேந்திரர் மீது குற்றசாட்டு பதிய தடை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றியது போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கையும்புதுவைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜெயேந்திரர்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதானவிசாரணை முடியும் வரை சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில்ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |