கோட்டைக்கு வந்த குஷ்பு
சென்னை:
பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு, நடிகர் பட்டாளத்துடன் இன்றுதலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகப் பெண்களின் கற்பு குறித்து அடாவடியாகப் பேசப் போய் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார் குஷ்பு. இதனால்அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் அடி விழுந்து தற்போதுதான் நிலைமை சரியாகி வருகிறது.
இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், சிறுமி ஒருவர் நட்சத்திர ஹோட்டலில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தகவலைபோலீஸாருக்குத் தெரிவிக்காமல் மறைத்தது தொடர்பாக புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையில்சிக்கி முழித்து வருகிறார் குஷ்பு.
இந் நிலையில், குஷ்பு இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அவருடன் நடிகர்கள் சத்யராஜ், விஜயக்குமார்,ஒய்.ஜி.மகேந்திரன், அலெக்ஸ் ஆகியோரும் வந்தார்கள்.
முதலில் பொதுத் துறை செயலாளரைப் பார்க்க அவர்கள் சென்றனர். ஆனால் அவர்களை தலைமைச் செயலாளரை சந்திக்கும்படிகூறி விட்டனர். இதனால் தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கு குஷ்பு குழுவினர் சென்றனர்.
தமிழக மழை, வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியளிக்க நடிகர்கள் குழு வந்ததாகத் தெரிகிறது.
வெள்ள நிவாரண நிதி என்ற போர்வையில், குஷ்பு சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் அப்படியே அதிகாரிகளிடம் இக் குழுமுறையிட வந்ததாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |