For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்ற தேர்தல் சீட் பங்கீடு: திமுக மும்முரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்களை பிரித்துக் கொடுப்பது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாத வாக்கில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு,கூட்டணி குறித்த வேலைகளில் மும்முரமாகியுள்ளன.

கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் திமுக அணியில் தான் உள்ளன. காங்கிரஸ், பாமக, மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழ் மாநில முஸ்லீம் லீக் மற்றும் ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், ஆர்.எம்.வீரப்பன்ஆகியோரும், கூட்டணியில் சேரத் தவிக்கும் திருமாவளவனும் என இந்தக் கூட்டணிக்கு கட்சிப் பஞ்சமோ, தலைவர் பஞ்சமோஇல்லை.

ஒரே ஒரு பஞ்சம் தான். அது சீட் பஞ்சம்.

ஏகப்பட்ட கட்சிகள் இருப்பதால் 234 தொகுதிகளை எப்படிப் பிரித்துத் தருவது என்று திணறி வந்த திமுக ஒரு வழியாக ஒருப்ளானுக்கு வந்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி திமுக குறைந்தபட்சம் 130 முதல் அதிகபட்சமாக 140 தொகுதிகள் வரை போட்டியிடும் என்று தெரிகிறது. மொத்தம்உள்ள 234 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க 117 இடங்கள் வேண்டும். அதற்கேற்ப 135 தொகுதிகளில்போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மிச்சம் உள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன்படி 94 முதல் 105 தொகுதிகள் வரைகூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கும்.

2001ம் ஆண்டு தேர்தலில் திமுக அணியில் இருந்த மதிமுக 21 இடங்களைக் கேட்டது. ஆனால், 17 இடங்கள் மட்டுமே தர திமுகமுன் வந்தது. இதையடுத்து மதிமுக தனித்து போட்டியிட்டது. மதிமுக ஓட்டை பிரித்ததால் திமுக பல தொகுதிகளை இழந்தது.

காங்கிரஸ் கடந்த முறை அதிமுக அணியில் இருந்தது. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகளையும் அதோடு உறவு வைத்திருந்தமூப்பனாரின் தமாகாவுக்கு 32 தொகுதிகளும் தந்தார் முதல்வர் ஜெயலலிதா. இரு கட்சிகளுக்குக்கும் சேர்த்து 46 தொகுதிகளைஅதிமுக கொடுத்தது.

இபபோதும் அதே 46 தொகுதிகளையாவது திமுகவிடம் வாங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.

இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சு நடத்த முன்னணித் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்ககாங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

மேலும் கடந்க 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு காங்கிரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த குறையைசட்டசபை தேர்தலில் திமுக நிவர்த்தி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால், அந்தக் கட்சிக்கு 46 சீட் எல்லாம்திமுக தராது என்றே தெரிகிறது.

பாமகவுக்கு 35, காங்கிரசுக்கு 25, மதிமுகவுக்கு 25 என்று பிரிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்தலைகள் ஏற்க மாட்டார்கள். ஆனால், டெல்லியில் இருந்து ஒரு லைன் உத்தரவு வந்தால் அவர்கள் சைலண்ட் ஆகிவிடுவார்கள்என்பதால் காங்கிரஸ் குறித்து திமுக ரொம்பவும் கவலைப்படவில்லை.

திமுகவின் கவலையெல்லாம் பாமக தான். அந்தக் கட்சி 50 சீட் வரை கேட்டு ராவடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வைகோவும் 30 சீட் வரை கேட்பார். ஆனால், அவரிடம் தானே நேரில் பேசி 25 சீட்டுக்கு அவரை ஒப்புக் கொள்ளவைத்துவிடலாம் என கருணாநிதி நினைக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தலா 8 தொகுதிகளில் போட்டியிட்டன. அதேதொகுதிகளை திமுகவிடம் அவை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அவற்றுக்கு தலா 7 இடங்கள் தரப்படலாம் என்று தெரிகிறது.

பிரச்சனையே பாமகவால் தான் வரும் என திமுக நினைக்கிறது. இந்தக் கட்சிக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பது சவாலானவிஷயமாக கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த தேர்திலல் பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. பாண்டிச்சேரியில்இந்தக் கட்சிக்கு 10 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.

2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அணி மாறிய பாமகவுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. பிளஸ் ராஜ்யசபா எம்பிபதவியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணிக்குத் தந்தது.

அப்போதே சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதி தர வேண்டும் என பாமக நிபந்தனை போட்டதாக ஒகு பேச்சு உண்டு. 50இடங்கள் வரை கேட்கப் போகும் பாமகவை 35 சீட்களுக்கு ஒப்புக் கொள்ள வைக்க திமுக ரொம்பவே சிரமப்படவேண்டியிருக்கும்.

குழு அமைக்கும் காங்கிரஸ்:

இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சு நடத்த முன்னணித் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்ககாங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணித் தலைவர்களுடன் பூர்வாகப் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள், கட்சி மேலிடத்தைக் கலந்து கொள்ளாமல் ஜி.கே.வாசன்,கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியுள்ளார் என்று குறைபட்டுள்ளனர்.

சமீபத்தில் டெல்லி சென்ற திண்டிவனம் ராமமூர்த்தியும், இதுகுறித்து தமிழக விவகாரங்களை கவனிக்கும் பொதுச் செயலாளர்அம்பிகா சோனி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து தேர்தல் நேரத்தில் கட்சியில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக தமிழக தொகுதிப் பங்கீடு, தேர்தல்ஏற்பாடுகள் ஆகியவற்றை கவனிக்க புதிய குழு ஒன்றை அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

புதிய குழு அமைப்பதன் மூலம் தான் வாசன் எதிர்ப்பாளர்களை சமாளிக்க முடியும் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X