For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜஇகா: திண்டிவனத்தை தூண்டிவிடும் கருணாகரன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல் புறக்கணித்தால் அதைபொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று திண்டிவனம் ராமமூர்த்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராமமூர்த்தி கூறுகையில், டெல்லி சென்ற நான் அங்கு அம்பிகா சோனி உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினேன்.நான் சமீப காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளின் நியாயங்களை அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அதைக் கவனமாககேட்ட அவர்கள் எனக்கும் சில யோசனைகள், அறிவுரைகளைக் கூறினர்.

நான் தற்போது மேற்கொண்டுள்ள மாவட்ட சுற்றுப்பயணம் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்தான். அதற்கு வேறு எந்தஉள்நோக்கமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் புறக்கணிப்படுகிறார்கள் என்ற உண்மையை நான் வெளியிட்டேன். அது சிலருக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் பிழைப்புக்காக கட்சிக்கு வந்தவர்கள்.

நான் காமராஜரின் காங்கிரஸிலிருந்து வந்தவன். எனவே மரியாதை, கெளரவம் போன்றவற்றில் எனக்கு ஆழமான நம்பிக்கைஉண்டு. இப்போதே, நாங்கள் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்று சிலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் கட்சித் தலைமைஅமைதி காக்கிறது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸுக்கு தொகுதிகள் பரவலாக ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக வட மாவட்டங்களில் அதிகதொகுதிகள் கிடைக்க வேண்டும். இது நமது உரிமை. இப்போதே அதுகுறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். இதை புறக்கணிக்கமுடியாது. அதை என்னைப் போன்றவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் திண்டிவனம்.

ஜ.இ. காங்கிரஸ் கட்சி ?:

இதற்கிடையே ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்க திண்டிவனம் ராமமூர்த்தி முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

சோனியா மீது அதிருப்தி கொண்ட கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதன்பிறகு ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு டிவிப் பெட்டி தேர்தல் சின்னமாகஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் திண்டிவனத்தை சமீபத்தில் கருணாகரன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அப்போது தமிழ் நாட்டிலும்ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியைத் தொடங்குமாறு கருணாகரன் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் கருணாகரனின் கட்சிக்கு திண்டிவனம் ராமமூர்த்தி தலைவராக இருப்பார்.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸை உடைத்து கட்சி ஆரம்பித்தால் அதிமுகவில் சில சீட்டுகளையும், மேற்படி விஷயங்களையும் பெறமுடியும் என திண்டிவனம் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X