For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூப்பனாரும் ஜாதி தானே: திண்டிவனம் அட்டாக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜாதிரீதியாகப் பேசக் கூடாது என்று ஜி.கே.வாசன் சொல்கிறார். ஆனால் கடைசி வரை அவரது அப்பாவுக்கு மூப்பனார்என்றுதானே பெயர் இருந்தது. மூப்பனார் என்பது ஜாதிப் பெயர் தானே என்று அதிருப்த் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம்ராமமூர்த்தி வினா எழுப்பியுள்ளார்.

விடாக் கண்டன், கொடாக்கண்டன் கதையாக திண்டிவனம் ராமமூர்த்தி விவகாரம் நீண்டு கொண்டே போகிறது. வன்னியர ஆதரவுநிலையை மிகவும் வலுவாக எடுத்துள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, வாசன், கருணாநிதி, ராமதாஸ் என யாரையும் விடாமல்சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார். அதிமுகவைத் தவிர.

திண்டிவனத்தின் போக்குக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்து வாசன் பேசியிருந்தார். அதற்கு பளிச்சென, அதேசமயம்நேரடியாகவே பதில் அளித்துள்ளார் திண்டிவனம்.

சென்னை தி.நகரில் நடந்த வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் கூட்டத்தில் திண்டிவனம் பேசுகையில், வட தமிழகத்தில்மொத்தம் 120 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 82 லட்சம் வன்னியர்கள் உள்ளனர். நாம் நினைத்தால்தான் யாரும் வெற்றி பெறமுடியும்.

ஆனால் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. இருக்கிற 10 எம்.பிக்களிலும் ஒருத்தர் கூடவன்னியர் கிடையாது. இதுகுறித்து நான் சோனியாவிடம் சொன்னால் பாஜகவை அகற்ற நிர்ப்பந்தம் இருந்தது என்கிறார்.நெருக்கடியான காலகட்டத்தை பயன்படுத்தி வன்னியர்கள் யாருக்கும் சீட் கிடைக்காமல் செய்தவர் கருணாநிதி.

நான் இப்படிப் பேசினால் ஜாதி துவேஷத்துடன் பேசுவதாக கூறுகிறார்கள். அன்றைக்கு வன்னியரான ராமதாஸை எதிர்க்கவேண்டிய நிலை வந்தபோது காங்கிரஸில் யாருமே எதிர்க்கவில்லை. வன்னியரான நான்தான் எதிர்த்தேன். ஓட்டு வேண்டும்என்கிறபோது மட்டும் ஜாதி வேண்டுமா?

ஜாதி பற்றிப் பேச வேண்டாம் என்று வாசன் சொல்கிறார். அப்படியென்றால் அவரது அப்பா கடைசி வரை மூப்பனார் என்றபெயரில்தானே அறியப்பட்டார். மூப்பனார் என்ற பெயரில் ஜாதி இல்லையா? ஜாதி இருக்கலாம், ஆனால் ஜாதி வேறுபாடுதான்இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் வாசன் குடும்பம்தான் கோலோச்சுகிறது.

இன்னொன்று, ஆளுங்கட்சிக்கு ஆதரான டிவிகள், பத்திரிக்கைளில் பேட்டி கொடுக்கக் கூடாது என்று வாசன் கூறுகிறார்.

அப்படியென்றால், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லி சில நாட்களுக்கு முன்பு ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒருடிவியில் கூட்டணி ஆட்சி குறித்து திமுகவுடன் பேசுவோம் என்று கூறினாரே, அவர் மீது வாசன் நடவடிக்கை எடுப்பாரா?நிடவடிக்கை எடு, தம்பி பார்ப்போம்.

என்னைச் சீண்டுவதை விட்டு விட்டு வன்னியர்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்ய வேண்டும். அதை விடுத்து சீண்டிக்கொண்டே இருந்தால் பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டே இருக்கும். என்னை யாரும் அடக்க முடியாது. நான்இங்கேதான் (காங்கிரசில்) இருப்பேன், புதுக் கட்சி ஆரம்பிக்க மாட்டேன். நான் ஏன் போக வேண்டும்? நான் வளர்த்த கட்சி இது.

எனது கோரிக்கை இதுதான், இது என்றுமே மாறாது. திமுக கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டும், துணை முதல்வர் பதவி தர வேண்டும். உறுதியான அதிகாரங்கள், அதாவது கூட்டணி ஆட்சியை ஆட்டிப் படைக்கும்வகையிலான அதிகாரங்கள் கொண்ட பங்கு தரப்பட வேண்டும்.

உங்களது மகனையும் (ஸ்டாலின்), பேரனையும் (தயாநிதி மாறன்) முதல்வராக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம். உங்களதுவசதிக்கு நாங்கள் உழைக்கவும் மாட்டோம், அவ்வளவுதான் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X