பஸ் எரிப்பு: சாட்சிகள் விசாரணை முடிந்தது-31 முதல் குறுக்கு விசாரணை
சேலம்:
தர்மபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் பஸ்சுடன் சேர்த்து அதிமுகவினரால் அநியாயமாக உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்றுடன் (திங்கள்கிழமையுடன்) முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடங்குகிறது.கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தர்மபுரி அருகே வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்தைஅதிமுகவினர் வழிமறித்து பேருந்துக்குத் தீவைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் இந்தவன்முறை வெறியாட்டத்தில் அதிமுகவினர் இறங்கினர்.
அதிமுகவினரின் இந்த கொடுஞ் செயலில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த வழக்கு முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், போலீசாரும் அதிமுகவினரும் அரசு வழக்கறிஞரும்கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வழக்கை கேலிக் கூத்தாக்கினர்.
அதிமுகவினரை காப்பாற்றும் நோக்கிலேயே வழக்கை போலீசாரும், அரசுத் தரப்பு வழக்கறிஞரும் நடத்தினர். இதனால் அதிர்ந்துபோன மாணவியின் தந்தை ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றியது. அரசு வழக்கறிஞரையும் மாற்றியது.ஆனாலும் போலீசார் வழக்கம்போல் இந்த விசாரணையில் போதிய ஒத்துழைப்பு தரவில்லை.
பல்வேறு தடைகள், இடைஞ்சல்களை எல்லாம் தாண்டி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கில் பல அதிமுகவினர் உள்ளடமொத்தம் 31 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள சாட்சிகளில் 123 பேரை சேலம் நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது. அதன்படி இதுவரை 122 பேர் சாட்சியம் அளித்துவிட்டனர். கடைசி சாட்சியாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி. சமுத்திரப்பாண்டி கடந்த 2 நாட்களாக சாட்சியம்அளித்து வந்தார்.
இன்று அவர் தனது சாட்சியத்தை முடித்துக் கொண்டார்.
31 முதல் குறுக்கு விசாரணை:
இதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடங்கும் என அறிவித்த நீதிபதிகிருஷ்ணராஜா, வழக்கை அந்தத் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றே சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் தொடங்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications