• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உரிமை மீறல் பிரச்சினை: விசாரணையை சந்திப்பேன் - கருணாநிதி

By Staff
|

சென்னை:

சட்டசபையில் என் மீது கொண்டு வரப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சினையை சந்திப்பேன். அது முறையற்றது என்பதைஆதாரத்துடன் விளக்குவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கேபிள் டிவி சட்ட மசோதா தொடர்பாக ஆளுநரை கருணாநிதி சந்தித்தது அவையின் உரிமையை மீறுவதாக உள்ளதாக கூறிகருணாநிதி மீது பார்வர்ட் பிளாக் உறுப்பினர் சந்தானம் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்சினையைஉரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் காளிமுத்து அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், உரிமை மீறல்பிரச்சினையின் அடிப்படையே தவறானது, முறையற்றது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட எந்த மசோதா குறித்தம் நான்ஆளுநரிடம் முறையிடவில்லை. மரியாதை நிமித்தமாகவே ஆளுநரை சந்தித்தேன்.

நான் ஆளுநரை சந்தித்த போது, மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் ஆளுநரைசந்தித்துத் திரும்பிய பிறகு, பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வேறு காரணத்திற்காக ஆளுநரைசந்தித்தனர். அவர்களுடன் நானும் போயிருக்கலாம்.

பேரவையில் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும், ஆளுங்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்கவும்தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் ஆளுநரிடம் புகார் கூறியுள்ளோம். நான் வீடு திரும்பிய பிறகு தான் கேபிள்டிவி சட்டம் குறித்துத் தெரிய வந்தது.

நான் கள்ளத்தனமாக ஆளுநரை சந்திக்கவில்லை. ஆனால் சட்டப் பேரவையில் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் இந்தமசோதாதான் கள்ளத்தனமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தால், ஒருநாளைக்கு முன்பாகவே சபையில் தெரிவிக்கப்பட்டு விடுவது வாடிக்கை.

சுனாமி வந்த போது, சில நிமிடங்களில் உயிர் போகும் நிலையில் நான் அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தது நாட்டுக்கே தெரியும். அதே சமயம், என் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்த காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியிடம் சுனாமி நிவாரணத்துக்காக ரூ. 1 கோடி கொடுத்தேன்.

இரண்டு திரைப்படங்களுக்கு எழுதியதற்காக கிடைத்த ரூ. 21 லட்சத்தையும் ஸ்டாலின் மூலமாக முதல்வரிடம் வழங்கினேன்.

சன் டிவி மூலமாக ரூ. 5 கோடி வசூலிக்கப்பட்டு அதை வழங்க முதல்வர் நேரம் ஒதுக்காததால், மத்திய அரசிடம்சேர்க்கப்பட்டதை நாடே அறியும். மழை வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆகாயத்தில் பறந்துபார்த்தபோது, நான் நடந்தும், காரில் சென்றும் போய் பார்த்து நலம் விசாரித்ததை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் அறிவார்கள். ரூ.25 லட்சம் நிவாரண நிதியை ஆளுநர் மூலம் வழங்கினேன்.

எதைச் செய்தாலும் பாரபட்சமின்றி செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம். ஒலிபரப்புச் சாதனமோ அல்லது ஒளிபரப்புச்சாதனமோ, பாரபட்சமில்லாமல் அனைத்தையுமே அரசு எடுத்துக் கொண்டால் நல்லது.

ரேடியோவை அரசே நடத்த வேண்டும் என்று கோரியுள்ளேன். தொலைக்காட்சியையும் அரசே நடத்த முன் வந்தால் மகிழ்ச்சிதான்.

அரசுடமைக் கொள்கையில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ராமச்சந்திராமருத்துவமனையை அரசுடமையாக்கியதை இதே ஜெயலலிதா தான் ரத்து செய்தார். தனியார் போக்குவரத்தைஅரசுடமையாக்கியதையும் ஜெயலலிதா தான் எதிர்த்தார் என்றார் கருணாநதி.

வைகோ விலக மாட்டார்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட்டணியிலிருந்து விலகுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதிபதிலளிக்கையில், இந்த நிமிஷம் வரை கூட்டணியில் மதிமுக உள்ளதாகவே நம்புகிறேன். வைகோ போக மாட்டார். எனக்குநம்பிக்கை உள்ளது.

கூட்டணியில் அவர் இருப்பாரா, மாட்டாரா என்பது குறித்து பத்திரிகைகள் தான் குழப்பமாக இருக்கின்றன. போதுமானஅளவுக்கு, திருப்தியான அளவுக்கு தராவிட்டால் தானே அவர் விலகுவார்?

மதிமுகவில் உள்ள சிலர் (நாஞ்சில் சம்பத்) திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசி வருவது குறித்து நான் எதுவும்சொல்வதற்கில்லை. அது குறித்து வைகோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் நான் பேச விரும்பவில்லை. அதுஅவர்களது உட்கட்சி விவகாரம் என்றார் கருணாநிதி.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X