அதிக கேள்வி- சேகர்பாபு: அதிக பதில்- ஓபி
சென்னை:
நடந்து முடிந்த 12வது சட்டசபையில் அதிக கேள்வி கேட்ட உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சேகர்பாபுதான் முன்னிலைவகிக்கிறார். அதேபோல அதிக வினாக்களுக்குப் பதில் அளித்தவர் என்ற பெருமை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்குக்கிடைத்துள்ளது.
சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று கடைசியாக சபாநயகர் காளிமுத்து பேசினார். அப்போது, பல்வேறு புள்ளிவிவரங்களை அவர் தெரிவித்தார். அதன் விவரம்:நடந்து முடிந்த சட்டசபை 12வது சட்டசபையாகும். கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி முதல் கூட்டத் தொடர் கூடியது.அதன் பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 12 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன.
கடைசிக் கூட்டத் தொடர் 13.1.2006 அன்று கூடியது. கடைசிக் கூட்டத் தொடர் மொத்தம் 11 நாட்கள் நடந்தது. ஒட்டுமொத்தமாககடந்த 5 ஆண்டுகில் 188 நாட்கள் சபைக் கூட்டம் நடந்துள்ளது.
47 நாட்கள் மாலையிலும் கூட்டம் நடத்தப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 25 நாட்கள் விவாதம்நடந்துள்ளது. 168 உறுப்பினர்கள் மொத்தம் 70 மணி நேரம் 56 நிமிடம் உரையாற்றியுள்ளனர். 155 உறுப்பினர்கள் 87 மணி நேரம்23 நிமிடங்கள் பேசியுள்ளனர்.
சட்டசபையில் அதிக கேள்விகள் கேட்டவர் அதிமுக உறுப்பினர் சேகர்பாபுதான். அவருக்கு அடுத்து சந்திரமோகன் (அதிமுக),ஏழுமலை (அதிமுக), மனோஜ் பாண்டியன் (அதிமுக), ஐ.கணேசன் (பாமக) ஆகியோர் உள்ளனர். திமுகவினர் யாரும் முன்னணிகேள்வியாளர்கள் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவைச் சேர்ந்த ஐ.கணேசன்தான் அதிக அளவில் கேள்விகள் கொடுத்து அவற்றை கேட்க அனுமதிக்கப்பட்டவர்களில்முதலிடத்தில் உள்ளனர். அவரைத் தொடர்ந்து சந்திரமோகன் (அதிமுக), கோவை தங்கம் (காங்கிரஸ்), அரசன் (பாஜக),ஜி.கே.மணி (பாமக) ஆகியோர் உள்ளனர். இதிலும் திமுகவினர் யாரையும் காணவில்லை.
அதிக வினாக்களுக்குப் பதில் அளித்தவர்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்து அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநிாதன் , பி.சி.ராமசாமி ஆகியோர்உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா கேள்வி நேரம் உள்பட அனைத்து விவாதங்களிலும் பங்கு கொண்டு மொத்தம் 48 மணி நேரம் 52நிமிடங்கள் பேசியுள்ளார். மொத்தம் 1,614 முறை விளக்கம் அளித்துள்ளார். 110 விதியின் கீழ் மொத்தம் 52 அறிவிப்புகளை அவர்வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications