அங்கே சட்டம் ஒழுங்கு குறித்து விஜய் ஆலோசனை! இங்கே மதுரை தனிஷ்க் ஜுவல்லரியில் 35 கிலோ நகை கொள்ளை
மதுரை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுடன் முதல்வர் விஜய் 3ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள பிரபல நகைக் கடையான "தனிஷ்க் ஜுவல்லரி"யில் (Tanishq Jewellery) 35 கிலோ மதிப்பிலான தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் கூட அப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் நடந்த குற்றங்களை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பல்வேறு கேள்வி எழுப்பியிருந்தார்.

கடத்தல், போதையில் இளைஞர்கள்
ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய பல்வேறு முன்னெடுப்புகளை எடுப்பதாக அரசு கூறினாலும் தொடர்ந்து கொலை, கொள்ளை, பலாத்காரம், குழந்தை கடத்தல், போதை பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு தீபாவளி பண்டிகையின் போது ஒரே நாள் இரவில் 11 கொலைகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்த நாளில் அதாவது 10 ஆம் தேதி வாக்கில் 17 கொலைகள் அரங்கேறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் மரண ஓலங்கள் கேட்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி, முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், உளவுத் துறை ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை இன்றும் 3ஆவது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
3 மணிக்கு கைவரிசை
இந்த நிலையில் பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மதுரை பழங்காநத்தம் காளவாசல் அருகே உள்ள தனிஷ்க் நகைக் கடையில் அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்பக்க வாசலில் ஓட்டை போட்டு 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த கடை கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டதாம். தீபாவளி பண்டிகை வந்த நிலையில் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என்பதால் அந்த கடைக்கு புது புது டிசைன்களில் ஏராளமான நகைகள் கொண்டு வரப்பட்டன.
ஊழியர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிக் கொண்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் மீண்டும் பணிக்கு வந்து கடையை திறந்த போது ஷோகேஸில் வைத்திருந்த நகைகள் காணாதது குறித்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து எஸ்.எஸ். காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். மதுரை காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டது தெரியவந்தது.
கண்ணாடி ஜன்னல்கள்
மேலும் கண்ணாடி ஜன்னல்களும் வளைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இது வடமாநில கொள்ளையர்களின் வேலையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.




Click it and Unblock the Notifications
