கிரிக்கெட்: இந்திய அணியிலிருந்து கங்குலி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியிலிருந்து முன்னாள் கேப்டன் செளரவ்கங்குலி நீக்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி அடுத்து ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. தற்போது டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளமுன்னாள் கேப்டன் கங்குலி, பார்த்திவ் படேல், வாசிம் ஜாபர், அணில் கும்ப்ளே, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர்நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதில், முகம்மது கைஃப், சுரேஷ் ரெய்னா, ஸ்ரீசந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி: ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கெளதம்காம்பீர், இர்பான் பதான், அஜீத் அகர்கர், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், சுரேஷ் ரெய்னா, ஸ்ரீசந்த், முகம்மது கைஃப், மகேந்திர சிங்டோணி, முரளி கார்த்திக்.












Click it and Unblock the Notifications