மோனோ Vs
சென்னை:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நவீனப்படுத்தப்பட்ட உணவகத்தை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில்,சென்னைக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள மோனோ ரயில் திட்டத்தால் மக்களுக்கு ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. இந்தத் திட்டத்திற்குப் பெரும் பொருட் செலவு ஆகும். அதேசமயம், மக்களுக்குப் பெரிய அளவில் பலன் இருக்காது.
இந்தத் திட்டம் பலனில்லாதது என்பதால் தான் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய ஊர்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னைக்கும் மெட்ரோ ரயில் திட்டம்தான் பொருத்தமானதாக இருக்கும்.
மெட்ரோ ரயிலை விட மோனோ ரயிலுக்கு 50 சதவீத அதிக முதலீடும், 30 சதவீத அதிக பராமரிப்பு செலவும் ஆகும். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற சிறிய அளவிலான இடமும், மக்கள் தொகையும் கொண்ட இடங்களுக்குத் தான் மோனோ ரயில் சரிவரும்.
மேனோ ரயிலால் மெட்ரோ ரயிலைப் போல மூன்றில் ஒரு பங்கு பயணிகளைத் தான் கொண்டு செல்ல முடியும். மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ. 125 கோடி தேவைப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ. 85 கோடிக்குள் முடித்துவிடலாம்.
நம் ஊருக்கு சரிப்பட்டு வராது. ஆனாலும் மோனோ ரயில் திட்டத்தால் பலனடைய இருப்பவர்கள் சென்னையில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு நெருக்குதல் தந்து வருகின்றனர்.
பெரிய பார்க்குகள், விமான நிலையங்களுக்குள் சிறிய தொலைவைக் கடக்கவே மோனோ ரயில் உதவும். பயணிகளை அள்ளிக் கொண்டு போக மெட்ரோ ரயிலே சரி. மேலும் மேனோ ரயிலுக்காக அண்ணா சாலை போன்ற இடங்களில் மேல் பாலத்தைக் கட்டுகிறது தமிழக அரசு. இதனால் இனி அந்த சாலைகளை அகலப்படுத்தக் கூட முடியாது.
2006-07ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார் வேலு.
இதற்கிடையே டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், வரும் ரயில்வே பட்ஜெட்டில்பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது என மறைமுகமாகத் தெரிவித்தார். கடந்த பட்ஜெட்டிலும் கட்டணத்தை அவர்உயர்த்தவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications