For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மன்மோகன் சிங்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை திருச்சி வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெய்வேலி சென்றார்.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கழகத்தின் 2வது சுரங்கத்தில் 4.5 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் விரிவாக்கதிட்டம் மற்றும் அனல் மின்சார நிலையத்தில் 250 மெகாவாட் திறனுடைய 2 யூனிட்களை தொடங்குவதற்கான அடிக்கல்லைநாட்டுகிறார். இதில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சிபு சோரன், இணை அமைச்சர் தாசரி நாராயணராவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இதன் பிறகு சேலம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடக்கும் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு சேலம்-செங்கப்பள்ளி வரையிலான 4 வழிப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மாலை 2.45 மணியளவில் நெய்வேலியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வருகிறார்.பிரதமர் வரும் ஹெலிகாப்டர் முதலில் சேலம் செரி சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும் என்று முதலில்கூறப்பட்டது.

இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளமும் அமைக்கப்பட்டது. ஆனால் தீடீரென்று நேற்றுமாலை ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தை மாற்றி சேலம் பெரியார் மேம்பாலம் அருகே உள்ள காந்தி மைதானத்தில் தரை இறக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அதகாரிகளுக்கு இரவோடு இரவாக பறந்தது. இதன் பிறகு காந்தி மைதானத்தில் பிரதமர் வரும் ஹெலிகாப்டர்தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன. சுமார் 1500 மநாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில்ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது புழுதி பறக்காமல் இருக்க சுமார் 50 லாரி தண்ணீர் மைதானத்தில் தெளிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகளை சேலம் சரக டிஐஜி அபாஷ்குமார், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயராம் மேலும் உயர் அதிகாரிகள்பலர் சென்று பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் விழா நடக்கும் இடமான அரசு கலைக்கல்லூரிமைதானத்துக்கு குண்டு துளைக்கா காரில் செல்ல இருப்பதால் அந்த சாலையும் வேகவேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தூப்பாக்கி ஏந்திய போலீசார் 20 அடிக்கு ஒருவர் வீதம் பாதுகாப்பு வழி நெடுக போடப்பட்டுள்ளது.

சேலம் விழாவில் ரூ. 850 கோடி செலவிலான 2 தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரமர் அடிக்கல் நாட்டுகிறார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா முன்னிலைவகிக்கிறார். மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் மத்திய அமைச்சர்கள்ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த வைகோ, ராம்தாஸ், என்.வரதராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டதலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழா முடிவடைந்த மன்மோகன் சிங் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளம்பட்டி செல்கிறார். அங்கு காந்தி கிராமபல்கலைக்கழகம் அருகே மாலை 6.30 மணிக்கு நடை பெறும் நிகழ்ச்சியில் 5 நான்கு வழிப்பாதை திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்தவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று இரவே திருச்சிக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி திருச்சி, சேலம், திண்டுக்கல் நெய்வேலி உள்பட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X