For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ மீது விஜயகாந்த் கடும் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

குளித்தலை:

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் எனக் கூறுபவர்கள், தைரியமிருந்தால் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோவை கடுமையாக சாடினார் தேசிய முற்போக்குத் திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஜயகாந்த் கரூரில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார். குளித்தலையில் அவர்பிரசாரத்தில் ஈடுபட்டபோது திமுக, மதிமுக ஆகியவற்றை கடுமையாக சாடினார். இதுவரை வைகோ குறித்து நேரடியாகவோ,மறைமுகமாகவோ விமர்சனம் செய்யாமல் இருந்த விஜயகாந்த் முதல் முறையாக அவரையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

குளித்தலைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், 30 இடங்களில் ஜெயிப்போம் என்று சிலர் (வைகோ) நினைக்கிறார்கள், அந்தத்தைரியம் இருந்தால் தனியாக நற்க வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு இந்தக் கதவு (திமுக) மூடினால் அந்தக் கதவு(அதிமுக) திறக்கும், எத்தனையோ வாசல்கள் திறந்திருக்கிறது என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்.

உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லை, உங்களது கட்சி மீது நம்பிக்கை இல்லை. எனவேதான் கூட்டணி வைக்கிறீர்கள்.ஒவ்வொருவருக்கும் நீங்கள்தான் உயர்ந்தவன் என்றால் ஏன் ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு ஆட்சி செய்ய விரும்புகிறீர்கள்.தனியாக நில்லுங்களேன். நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

நான் யாருடனும் இல்லை, எந்தக் கட்சிக்குப் பின்னாலும் நான் போகவில்லை. எனக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும்வேண்டாம். நான் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். உண்மையைத்தான் பேசுவேன். என்னை மிரட்டிப் பேசினால் நானும்மிரட்டலாகத்தான் பேசுவேன்.

கடந்த 25 வருடமாக இதுவரை இருந்த கட்சிகள் மக்களுக்காக எதுவும் பேசவில்லை. ஓட்டுக்காகவும், கூட்டுக்காகவும்தான்அவர்கள் பேசி வருகிறார்கள்.

7 கட்சி கூட்டணி என்கிறார்கள், 5 கட்சி கூட்டணி என்கிறார்கள். நான் இந்தக் கூட்டணிகளில் சேர மாட்டேன். தனியாக்ததான்உங்களை சந்திக்கிறேன், சந்திப்பேன்.

இரண்டு டிவியிலும் இரண்டு கட்சியினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றப் பேட்டியல் வாசிக்கிறார்கள். இதையெல்லாம்கேட்க வேண்டிய தலையெழுத்து மக்களுக்கு. இந்த டிவிக்களைப் பார்த்தாலே இவர்களது ஊழல்கள் தெரிந்து விடும். நானோசொத்தை விற்று கட்சி நடத்தி வருகிறேன்.

ஜோசியக்காரர் சொல்லித்தான் நான் கட்சி ஆரம்பித்தேன் என்கிறார் ஒருவர் (ஸ்டாலின்). எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஜோசியத்தையும் நான் நிம்புபவன்தான். உங்களுக்கு அது இல்லை என்றால் 10 மணிக்கு வாங்க வேண்டிய விண்ணப்பங்களைஎதற்கு 12 மணிக்கு வாங்குகிறீர்கள்?

மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியிலிருந்து உருவானது. ஆனால் நான் சொத்தை விற்று கட்சியைதொடங்கியவன். தமிழகத்தில் அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சி செய்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு ஆட்சிசெய்கின்றனரா? இல்லையே, ஊழல் தான் செய்கின்றனர்.

அதிமுக, திமுக கட்சிகளை பார்த்து நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும்ஜாதி கட்சிகளை உங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்தக் கட்சிகள் 30, 40 என சீட் கேட்பது எதற்கு? மக்களுக்கு சேவை செய்வதற்காக இல்லை. வெற்றி பெற்றதும் சம்பாதிக்கத்தான். இவர்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறட்டுமே? எதற்காக கூட்டணி என்று அலைகின்றனர்?

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் திமுக ஆட்சி செய்கிறது. இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசுதமிழகத்துக்கு நிதி ஒதுக்கினால், நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று திமுக அவர்களை மிரட்டுகிறது.

இம்முறை ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த எனது கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். தேமுதிக 234 தொகுதியிலும் தனித்துபோட்டியிடுகிறது. நான் ஊழலற்ற ஆட்சி அமைத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X