சாலை விபத்தில் தஞ்சை அதிமுக மா.செ. பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுஊர் திரும்பிய தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 2 பேர் பலியாயினர்.
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர் மதியழகன், ஒன்றியச் செயலாளர்சந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் கார் மூலம் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.இவர்களது கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை நோக்கிவந்த லாரி கார் மீது மோதியது. இதில் மதியழகனும், சந்திரனும் பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர்.
மதியழகன் மற்றும் சந்திரன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் வாகனங்களில்செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications