For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக Vs

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி குறித்து விஜயகாந்த் பேசினால் தப்பா, அவரைப் பற்றிப் பேசவே கூடாதா என்று திமுக பொருளாளர்ஆற்காடு வீராசாமிக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவரான நடிகர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திமுக குறித்தும் திமுக தலைவர் கருணாநிதி,ஸ்டாலின், டி.ஆர்.பாலு (கல்யாண மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டதால்) உள்ளிட்டவர்களை தனிப்பட்ட முறையில்கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

அதே நேரத்தில் அதிமுகவை தாக்குவதில்லை. திமுகவோடு சேர்த்து அதிமுகவுக்கும் ஓட்டு போடாதீர்கள் என்று பொத்தாம்பொதுவாக பேசி வருகிறார்.

விஜய்காந்தின் இந்த தனிப்பட்ட அட்டாக்குக்கு ஆற்காடு வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்து சமீபத்தில் அறிக்கை விட்டார்.விஜயகாந்த் தொடர்ந்து கருணாநிதி குறித்துப் பேசினால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் என்றும் எச்சரித்திருந்தார்.

இதற்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயதில் பெரியவர்களை என்றைக்குமே மதிக்கக் கூடியவர் எங்கள்தலைவர் விஜயகாந்த். கருணாநிதியை எதிர்த்துத்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. இதுஅபாண்டமான குற்றச்சாட்டு.

கடும் இன்னல்களுக்கு இடையே சீரோடும், சிறப்போடும் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தி முடித்து அவருக்கு தங்கப்பேனா (ஆற்காடு வீராசாமி குறிப்பிட்டது போல வெள்ளிப் பேனா அல்ல) வழங்கியவர் எங்கள் தலைவர். இது கருணாநிதி மீதுவைத்துள்ள அன்பு, பாசம் ஆகியவை காரணமாக மட்டுமே.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி கதையாக, தினமும் ஒரு செய்தியைப் போட்டு விஜயகாந்த்தை சீண்டிப்பார்த்தீர்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் சில கூட்டங்களில் திமுகவைப் பற்றியும், கருணாநிதியைப் பற்றியும்சில உண்மைகளை எங்களது தலைவர் கூறி வருகிறார்.

நட்பு வேறு, அரசியல் வேறு. மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக விமர்சிக்கும்போது அதற்கு அரசியல் ரீதியாகபதில் அளித்தால் அதை எங்களது தலைவர் வரவேற்பார். அரசியல் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவர் அல்ல.

ஆனால் பந்தை ஆடுவதற்குப் பதிலாக ஆடுபவர்களை இடித்துத் தள்ளுபவர்களை மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மழை, வெள்ளத்தால் தமிழக மக்களின் வாழ்க்கையே புரட்டிப் போட்டது போல ஆனபோது, மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள திமுக அதன் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றியதா என்றுதான் எங்களது தலைவர் கேட்டார்.

ஏன் இதை அவர் கேட்கக் கூடாது? கருணாநிதி குறித்துப் பேசவோ கூடாதா?

எங்களது தலைவர் 148 (ஆற்காடு குறிப்பிட்டது போல 125 அல்ல) படங்களில் நடித்து அப்படங்களுக்காகப் பெற்றசம்பளத்திற்குரிய வருமான வரியை உரிய முறையில் கட்டியுள்ளார். ஆண்டுதோறும் தவறாமல் வருமான வரிக் கணக்கைதாக்கல் செய்து வருகிறார்.

ஆனால் பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு நீங்கள் ஒருமுறையேனும் வருமான வரி கட்டியதுண்டா? அப்போதுஉங்களுடைய சொத்துக்கள் எவ்வளவு? தற்போது தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் உள்ள சொத்து மதிப்பு என்ன?இந்த விவரங்களை வெளியிடத் தயாரா?

உங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி அத்தனை விவரங்களையும் நாட்டுமக்களுக்கு தேர்தலுக்கு முன்பாக தெரிவிக்க நீங்கள் தயாரா? திறந்த புத்தகம் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் அதற்குத் தயாரா?

புத்தகம் திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா என்பது பிரச்சினை அல்ல. அதில் உள்ள விவரங்கள் உண்மையா என்பதுதான்முக்கியம். விஜயகாந்த்தை வளர்த்தது நீங்கள் அல்ல, தமிழக மக்களும், ரசிகர்களும்தான் அவரை வளர்த்தார்கள்.

வம்புக்கிழுத்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்கிறீர்கள். ஆனால் உங்களது வண்டவாளங்களை வெளியில் கொண்டுவந்தால் அதற்கு தமிழகத்தில் உள்ள தண்டவாளங்கள் போதாது என்பதை நாடே அறியும் என்று கூறியுள்ளார் ராமு வசந்தன்.

ஆட்சிமன்றக் குழு அமைப்பு:

இதற்கிடையே வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அதிமுக பாணியில் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளார் விஜயகாந்த்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகதலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன், பொருளாளர் சுந்தரராஜன், துணைச் செயலாளர்பார்த்தசாரதி, தலைமை நிலைய செயலாளர் முருகேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ஈரோடு சந்திரகுமார், வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் மணிமாறன், முத்துராமு ஆகியோர் இக்குழுவின் பிற உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X