For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மீது கை வைத்தால்..திண்டிவனம் பிடிசாபம்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். ஜெயலலிதாவை சந்தித்ததற்காகஎன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அதை நான் படிக்கக் கூடப் போவதில்லை என்று திண்டிவனம் ராமமூர்த்திஆவேசமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியூட்டும் வகையில்முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் திண்டிவனம் ராமமூர்த்தி கூறுகையில்,

நான் செஞ்சது தப்பா? நான் செஞ்சது தப்பா?

முதல்வரை நான் சந்தித்தபோது, இருவரும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசிக் கொண்டோம். நான் மற்ற கட்சித்தலைவர்களை சந்திக்கக் கூடாது என்று யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது.

சோனியா காந்தி விருந்து வைத்தால் வாஜ்பாய், அத்வானியை கூப்பிடுகிறார், பேசுகிறார்கள்.

நான் ஜெயலலிதாவை போய்ப் பார்த்தால் தப்பா? காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக கருணாநிதி இருந்தபோது கூட நான் அவரைச்சந்தித்தேனே, அப்போது காங்கிரஸ் தலைவர்களுக்கு அது தவறாகத் தெரியவில்லையா?

சமீபத்தில் சென்னைக்கு வந்த வெங்கையா நாயுடு கூட கருணாநிதியை சந்தித்தாரே? எனது சந்திப்பில் எந்தத் தவறும் இல்லை.அதில் மனிதநேயம்தான் (அடே..யப்பேய்..) உள்ளது. இதற்காக எல்லாம் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

கழுத்தை அறுப்பார்களா?

தமிழக அரசியலில் ஒரு தீண்டாமைப் பழக்கம் உள்ளது. ஒரு தலைவர், இன்னொரு கட்சியின் தலைவரை சந்திக்கக் கூடாது என்றதீண்டாமையை ரொம்ப நாளாக கடைப்பிடிக்கிறார்கள். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சித்து நோட்டீஸ்அனுப்பினால் அதுகுறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

அதைப் படிக்கக் கூடப் போவதில்லை. என்ன கழுத்தையா அறுத்து விடுவார்கள்?

அவர்களுக்குத் தேவையானால் வக்கீல் நோட்டீஸ் போல அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டே இருக்கட்டும். அதை யாரும்தடுக்க முடியாது. நான் தொடங்கியுள்ள இந்திரா காந்தி பேரவை, காங்கிரஸ் கட்சியின் தன்மானத்திற்காக தொடங்கப்பட்டஅமைப்பு.

காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் பெயரில் பேரவை உள்ளது. அது கட்சிக்கு எதிராகவா செயல்படுகிறது?

நான் பேசுவதற்கு கட்சி மேடை போட்டுத் தரவில்லை. எனக்கு பேச மேடை வேண்டும். அதற்குத்தான் இந்தப் பேரவை. இதைஅதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு என்று அவர்கள் நினைத்தால் அது அறியாமை.

வாசன் யார்?

என் மீது நடவடிக்கை எடுக்க வாசன் யார்? எனக்கு வாத்தியார் சோனியா காந்திதான். வாசன் இன்னும் எத்தனை நாளைக்கு?

தனிக்கட்சி தொடங்குவது குறித்து இப்போது கூற முடியாது. பொருத்திருந்து பாருங்கள். நிலைமைக்கேற்ப எல்லாம் நடக்கும்.பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தேன்.

எனக்கு கருணாநிதி எந்த உத்தரவையும் போட முடியாது. அவர் சொல்லி நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சோனியாசொல்லட்டும், நான் கேட்பேன். தியாகம் செய்யுங்கள் என்று கருணாநிதி கெஞ்ச ஆரம்பித்து விட்டார். விரைவில் கூட்டணிஆட்சியில் சேருங்கள் என்றும் கெஞ்ச ஆரம்பிப்பார்.

ஜெயலலிதா யார்?

ஜெயலலிதா யார்? இந்த மாநிலத்தின் முதல்வர், எல்லோருக்கும் பொதுவானவர். அவரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்,அது ஜனநாயக கடமை.

போன நாடாளுமன்றத் தேர்தலின்போது சோனியாவை ஜெயலலிதா தாக்கிப் பேசினார். சரி, அதற்கு முந்தைய தேர்தலில் யார்பேசினார்கள்? அதற்குள் மறந்து விட்டதா? அரசியலைப் பொருத்தவரை நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர பகைவரும்கிடையாது.

என் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்தால் அதன் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். இதுவரை நான்நடத்தி வந்த கல்யாண மண்டபக் கூட்டங்கள் அவ்வளவுதான், இனிமேல் நேரடியாக தொண்டர்களையே சந்திக்கப் போகிறேன்,யார் தடுக்கிறார்கள் பார்க்கலாம் என்றார் திண்டிவனம்.

முன்னதாக இந்திராகாந்தி பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடந்த மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூவராகன், முன்னாள் எம்.பிக்கள் ராஜேஸ்வரன், சிங்காரவடிவேலுஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்.கில் பரவும் திமுக கலாச்சாரம்:

இந் நிலையில் சென்னை திரும்பிய திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடியவரை தலைவராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒரு அடிமையை மாற்றி விட்டு இன்னொரு அடிமையை போட்ட கதையாகி விடும்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில், இந்திரா காந்தி அம்மையாரை நடுத் தெருவில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் திமுகவினர். கருணாநிதி தலைமையில் இந்த கொலை வெறித் தாண்டவம் நடந்ததை நாடறியும்.

தம்பி, வாசா...

அந்தக் கல்லடி கலாச்சாரத்தை, வன்முறைக் கலாச்சாரத்தை சில எடுபிடிகளின் மூலம், ஜி.கே.வாசன் போன்றோர் மூலமாக காங்கிரஸ் கட்சிக்குள் பரப்பி வருகிறது திமுக. இன்னும் இந்தத் தம்பி எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியை அழிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு கெளரவமான வகையில், தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு நான் காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X